Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியலில் மட்டும் தான் குணசேகரன் அப்படியா..!! அப்போ இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு இருந்தீங்களா..??

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நடிகர்களின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

சீரியலில் குணசேகரன் கேரக்டரில் மிரட்டி கொண்டிருக்கும் மாரிமுத்து வெளியிட்ட போட்டோவை பார்த்து பலரும் திகைப்பிலிருந்து மீளவே இல்லையாம்.

உபதேசம் எல்லாம் உங்க தம்பிகளுக்கு மட்டும் தானா? ? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பிடித்துள்ளது. அண்ணன் தம்பி கதைகளுக்குள், அண்ணன் தனது தம்பிகள் தன்னை விட்டு பிரிந்து விடக்கூடாது என்றும் தன் பேச்சை மீறக் கூடாது என்றும் சென்டிமென்ட் நாடகம் போட்டு பல நேரங்களில் மிரட்டியும், அழுதும் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் என்னதான் படித்தாலும் எங்கள் வீட்டில் ஆண்கள் சொல்வதை தான் பெண்கள் கேட்க வேண்டும். வீட்டில் வேலைகளை செய்வதற்கு தான் பெண்களை வைத்திருக்குறோம் என்று ஒரு ஒரு குடும்பத்தை குணசேகரன் கட்டி ஆண்டு வருகிறார்.

பெண் உரிமை கட்டுப்பாடு

பெண் உரிமை கட்டுப்பாடு

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து அந்த கேரக்டரோடு ஒன்றுவிட்டார். அதனால் இந்த சீரியலில் இவர் நடிக்கிறார் என்பதை தாண்டிலும் இவர் நிஜமாகவே இப்படித்தான் இருப்பாரோ என்று பல நேரங்களில் ரசிகர்கள் நினைத்து இவரை கண்ட மேனிக்கு திட்டி வருகிறார்கள். இந்த சீரியலில் தனது தம்பியின் மனைவிகளையும் இவர் தரை குறைவாக பேசுவது, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடக்கு முறையை கையாண்டு வருவது பலருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் ஒரு சில ரசிகர்களுக்கு இதுதான் பாரம்பரியம் கட்டுப்பாடு என்றெல்லாம் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்களாம்.

யாருக்கும் பயமில்லை

யாருக்கும் பயமில்லை

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வீட்டின் கடைசி மருமகளாக அடி எடுத்து வைத்ததும் இந்த வீட்டின் நிலைமையை மாற்றி பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடுவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்து வருகிறது. யாராக இருந்தாலும் எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விடுவேன் என்று குணசேகரன் ஜனனியையும் அடக்கி ஆண்டு வருகிறார். ஜனனி குரலை உயர்த்தி பேசினால் தனது தம்பியிடம் குணசேகரன் சென்டிமென்ட் சீனை தட்டி விட்டதும் அப்படியே குணசேகரனின் தம்பி சூடாகி ஜனனியை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விடுகிறார்.

இப்படி மாறிவிட்டாரே

இப்படி மாறிவிட்டாரே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தற்போது டிஆர்பியும் அதிக அளவில் இருக்கும் நிலையில் கதாநாயகி ஜனனியை விடவும் அதிகமான ரசிகர்கள் குணசேகரனை தான் இன்று என்ன செய்வாரோ என்று எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் குணசேகரன் அவருடைய மனைவியாக நடிக்கும் ஹனிகாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சீரியலில் புடவையில் பவ்யமாக இருக்கும் ஹனிகா மார்டன் உடையில் டைட்டான ஜீன்ஸோடு காலுக்கு மேல் கால் போட்டபடி அமர்ந்து இருக்கிறார். அவர் அருகில் வேஷ்டி சட்டையில் வேஷ்டியை ஸ்டைலாக தூக்கிப்பிடித்தபடி ஹனிகாவின் தோளில் கை வைத்து, மாரிமுத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் உபதேசங்கள் எல்லாம் உங்க தம்பிகளுக்கு மட்டும் தானா?? நீங்க வெளியில முறைச்சுக்கிட்டாலும் பொண்டாட்டிக்கு இவ்வளவு அடிமையாக இருக்கீங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+