எதிர்நீச்சலில் ஜனனியின் அப்பத்தாவாக களமிறங்கும் கில்லி பட நடிகை.. திடீரென்று மாற்றப்பட்ட கதை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் அப்பத்தா கேரக்டரில் நடிகை டி.கே. கலா அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இப்போதுதான் ஜனனிக்கு போட்டியாக ஜனனியின் அப்பாவின் அண்ணன் மகன்கள் சீரியலில் அறிமுகமாக இருக்கின்றனர்.
ஜனனியின் அப்பாவைப் பெற்ற அம்மாவாக கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடித்து பிரபலமான டி.கே கலா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மேலே கொண்டு வரும் முக்கிய சீரியல்களாக தொடங்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலில் பெண்கள் பல இடங்களில் அவமானப்பட்டு தோற்றுப் போய்க் கொண்டே இருக்கின்றனர்.
எப்போதுதான் இந்த பெண்களுக்கு வெற்றி கிடைக்குமோ என்பது பார்க்கும் ரசிகர்கள் ஏக்கமாக வைக்கும் வேண்டுகோளாகவும், கேள்வியாகவும் இருக்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்த சீரியலில் வில்லன்கள் மட்டுமே வெற்றி பெற்று கொண்டிருப்பதாக காட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாதத்திற்கு ஒரு முறை இந்த சீரியலில் முக்கியமான திருப்பங்கள் வந்து சீரியலை விறுவிறுப்பு குறையாமல் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஆரம்பத்தில் குணசேகரனின் அப்பத்தா வீட்டிற்குள்ளே பேசாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில் இந்த பாட்டி எதற்காக இந்த சீரியலில் இருக்கு என்றே தெரியவில்லையே... சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பாம்பு போல இந்த கேரக்டரும் இருக்கிறதே என்று ரசிகர்கள் கேள்வியோடு காத்திருந்த நிலையில் தான் திடீரென்று தான் பட்டம்மாள் பி ஏ என்று பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அதற்கு பிறகு சீரியலில் போக்கு மாறிப்போனது. அதை தொடர்ந்து ஆதிரையின் திடீர் திருமணம் நடைபெற்றது. இப்போது அதுவெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி அப்பத்தா சில வாரங்களுக்கு முன்பு காரில் வெடித்து இறந்து போய்விட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பத்தா உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் முன்னேற வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். பெண்களுக்கு அடிக்கடி அட்வைஸ் மழைகளையும் பொழிந்து கொண்டிருந்தார். என்னதான் ஜனனி அட்வைஸ் குடோனாக இருந்தாலும் ஜனனிக்கு அடிக்கடி அட்வைஸ் கொடுத்தது அப்பத்தா தான். ஆனால் இப்போது சீரியலில் அப்பத்தான் இல்லை என்பது போன்று காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனனிக்கு போட்டியாக அவருடைய சித்தப்பா அதாவது ஜனனியின் அப்பா நாச்சியப்பனின் அண்ணன் மகன்கள் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன் என்று இரண்டு வில்லன்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். ஏற்கனவே குணசேகரன் என்கிற ஒரு வில்லனே செய்யும் அக்கப்போரு தாங்க முடியவில்லை. பல பெண்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் இப்போது புதியதாக இரண்டு வில்லன்கள் வந்திருக்கின்றனர். சீரியலின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக இயக்குனர் வில்லன்களை சரமாரியாக இந்த சீரியலில் களம் இறக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இப்போது ஜனனியின் அப்பத்தா அதாவது நாச்சியப்பனின் அம்மாவாக கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்த நடிகை டி.கே கலா அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் இவருடைய எபிசோடுகள் சீரியலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் வெளியானதும் இது மட்டும் உண்மையாக இருந்தால் குணசேகரனுக்கு ஏற்ற போட்டி வில்லி இனி இவராகத்தான் இருக்கும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.
ஏற்கனவே ஜான்சி ராணி பெரிய அளவில் வீட்டுக்குள்ளேயே இருந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் ஜனனியின் அப்பத்தா என்ன மாதிரி கேரக்டராக வரப்போகிறாரோ என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அவர் வில்லியாக வரப்போகிறாரா? அல்லது ஜனனியை பார்த்ததும் தன்னுடைய பேத்தி என்பதால் பாசமழை பொழிந்து ஜனனிக்கு உதவ போகிறாரா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications