எனக்கும் ஒரு காதல் இருந்தது..ஏம்மா ஏய்..எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் சொன்ன காதல் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரிமுத்து என்பதை விட எதிர்நீச்சல் குணசேகரன் என்றால் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிகிறது. மருமகள்களைப் பார்த்து ஏம்மா ஏய் என்று அதட்டும் போதும் சரி..மதுரை மீனாட்சி என்று வணங்கும் போதும் சரி அல்டிமேட் நடிப்புதான். அவருக்குள் இருக்கும் மென்மையான காதல் பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது இந்த மினி இன்டர்வியூ. சன்டிவியில் ட்விட்டர் பக்கத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் டிவி சீரியலில் தனது மருமகள்களை அவர் அழைக்கும் தொனியே அலாதியானது. "ஏம்மா ஏய்".. என்று ஒரு அதட்டலில் எல்லோரையும் நடுங்க வைத்து விடுவார்.

Ethir Neechal Serial Adhi Gunasekaran alis Marimuthi Mini interview

அவருக்கு பிடித்தது எது என சின்னதாக ஒரு மினி பேட்டி எடுத்து சன் டிவி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். எனக்கு ஆதி குணசேகரனின் கம்பீரம் ரொம்ப பிடிக்கும். எதிர் நீச்சல் சீரியலில் மூன்று தம்பிகள் இருந்தாலும் கதிர்தான் பேவரைட் தம்பி. எதிர் நீச்சல் சீரியலில் கேமராவிற்குள் மருமகள்கள் 4 பேரையும் பிடிக்காது. அவுட் ஆஃப் கேமரா நாலு பேரையும் பிடிக்கும்.

அடிக்கடி யூஸ் செய்யும் வார்த்தை ஏம்மா ஏய்..தான் வேறென்ன? இந்தாம்மா ஏய் என்று சொன்னாலே சும்மா அதிருதே. கோபம்தான் என்னோட பலம், பலவீனம். புடிச்ச பாட்டு பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா..முதல் மரியாதை பட பாடல் என்கிறார் மாரிமுத்து.

எனக்கு பெரிய அளவில் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் பெண்களை கடவுளாக மதிப்பவன் நான். அடடே சீரியலில் பெண்களை துளியும் மதிக்காத குணசேகரன் சொன்ன வார்த்தை இது நோட் பண்ணுங்கப்பா. அப்போ மதுரை மீனாட்சியை கும்பிடுவது சீரியலுக்காகத்தான்.

Ethir Neechal Serial Adhi Gunasekaran alis Marimuthi Mini interview

முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, காலை முதல் மாலை வரை மண் அள்ளி போட்டு ரூ.4.50 சம்பளம் வாங்கினேன். மன நிறைவை கொடுத்தது. அந்த சம்பளத்தை முதன் முதலாக வாங்கும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்கிறார்.

நீங்க பண்ணியிருக்கலாம்னு நினைச்ச தமிழ் படம் என்று கேட்டதற்கு தேவர் மகன் என்று சட்டென்று சொன்னார். பிடித்த நடிகர் வடிவேலு. காலையில் எழுந்த உடன் சோஷியல் மீடியாவில் நம்மைப்பற்றி ஏதாவது வந்திருக்கா என்று பார்ப்பேன் அப்போதுதான் அந்த நாள் நல்லாயிருக்கும் என்கிறார் மாரிமுத்து.

திரைப்படங்களில் நான் செய்த கதாபாத்திரங்களில் கொம்பன், பரியேறும் பெருமாள் பட கதாபாத்திரங்கள் பிடிக்கும். எல்லாத்தையும் விட இப்போ ரொம்ப பிடிச்சது ஆதி குணசேகரன்தான்.

காதல் பற்றி கேள்விக்கு மாரிமுத்துவின் பதில் மென்மையாக வெளிப்பட்டது. கல்லூரி காலத்தில் எனக்கும் ஒரு காதல் இருந்தது. எல்லோரையும் போலத்தான். காதலை கிராஸ் பண்ணாமல் யாரும் வரமுடியாது. என்னை காதலித்தவருக்கு நான் காதல் கடிதம் கொடுத்தேன். எனக்கும் அவர் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார். ரொம்ப நாட்கள் அந்த காதல் கடிதத்தை வைத்திருந்தேன். காலப்போக்கில் அந்த காதல் கடிதம் காணாமல் போய் விட்டது என்று வருத்தத்துடனே சொன்னார் குணசேகரன். முரட்டு இதயத்திற்குள் இவ்வளவு மென்மையா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+