எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனியை தொடர்ந்து மாற்றப்பட்ட பிரபலம்! இனி இவருக்கு பதில் இவர்தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகம் வரும் திங்கள் முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வந்த முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் யார் என்ற விவரங்கள் பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கி இருந்தார். திருச்செல்வம் ஏற்கனவே கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியலை இயக்கிய நடித்தும் இருக்கிறார். அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியல் தொடங்குவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

மக்களின் எதிர்பார்ப்பை அந்த சீரியலும் நிறைவேற்றியது. சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அதிலும் ஆதி குணசேகரன் ஆக மாரி முத்துவின் நடிப்பு அபரிமிதமாக இருந்தது. அதனாலயே அவருடைய நெகடிவ் கேரக்டர் கூட ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
ஏற்கனவே கோலங்கள் சீரியலில் ஆதியின் நடிப்பு எவ்வளவு தனித்துவமாகவும் பேசப்பட்டதோ அது போலவே மாரிமுத்துவின் கேரக்டரும் பெரிய அளவில் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் காலமானார். அவருடைய மரணத்திற்கு பிறகு அந்த சீரியலின் கதை மாற்றப்பட்டது. புதிய கதை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனாலேயே அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட 2000திற்கு மேலே எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரியல் 770 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திருச்செல்வத்திடம் எப்போது இரண்டாவது பாகம் தொடங்கும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியல் 2 தொடங்குகிறது என்று ஒரு ப்ரோமோ வெளியிட்டு இருந்தார். அதன்படி வரும் டிசம்பர் 23ஆம் தேதி திங்கள்கிழமை முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலர் இரண்டாவது பாகத்தில் தொடரவில்லை என்று தெரிகிறது.

அதிலும் தாரா கேரக்டரில் நடித்த குழந்தையும் மாற்றப்பட்டு இருக்கிறார். அதுபோல ரேணுகா மற்றும் ஞானம் தம்பதியின் குழந்தையாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யாவும் மாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜானு இனி ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கிறார். ஜானு ஒரு சில ஷார்ட் பிலிம்களின் நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக மந்தகம் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்து சில வருடங்களுக்குப் பிறகு என்று கதை பயணிப்பதால் தாரா மற்றும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் மாற்றப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது. அதுபோல இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வந்தார். அவர் இரண்டாவது பாகத்திலும் தொடர்வாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் ப்ரோமோவில் ஒரு சில இடங்களில் வேலராமமூர்த்தி காட்டப்படுகிறார். இதனால் வேலராமமூர்த்தி தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications