எதிர்நீச்சல் "அருண்” அம்மா யார் தெரியுமா? "பிரபல” சீரியல் நடிகை.. அப்பாவும் நடிகர் தான்..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அருண் கேரக்டரில் நடிகர் சாணக்கியன் நடித்து வருகிறார்.
இவர் மட்டுமல்லாமல் அவருடைய வீட்டில் அவருடைய அம்மாவும் சின்னத்திரை நடிகையாக தான் இருந்து வருகிறாராம். அது போல அவருடைய அப்பாவும் மலையாள நடிகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அருண் யார் என்பது பற்றியும் அவரைப் பற்றிய முழு தகவல்களையும் விரிவாக பார்க்கலாம்.அருண் எதிர்நீச்சல் சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கென்று எப்போதும் அதிகமான ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களுமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் அருண் கேரக்டரில் நடிக்கும் நடிகர் சாணக்கியாவும் ஒருவர்.
நடிகர் சாணக்கியன் எதிர்நீச்சல் சீரியலுக்கு வருவதற்கு முன்பே பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியலில் கோபியின் மகன் கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து வெள்ளி திரையில் பல நடிகர்களின் குழந்தை நட்சத்திரங்களாகவும் நடித்திருக்கிறார்.

அதிலும் நடிகர் ஜெய் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் அடித்த "அவள் பெயர் தமிழரசி" திரைப்படத்தில் சின்ன வயது ஜெய் ஆக நடித்திருப்பார். அதுபோல பரமசிவன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் தம்பியாக நடித்திருப்பார். அப்போது நடிகர் அஜித் உடன் இவர் கியூட்டாக சேட்டைகள் செய்து கொண்டிருப்பார். அது குறித்து சமீபத்தில் கூட அந்த மலரும் நினைவுகளை சாணக்கியன் பகிர்ந்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி திரைப்படத்தில் குழந்தையாகவும் நடித்திருப்பார். இந்த நிலையில் நடிகர் சாணக்கியன் சின்னத்திரை சீரியல் நடிகை ஆன கீதா சரஸ்வதியின் மகன் தான். அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதோடு நடிகர் சாணக்கியனின் அப்பாவும் மலையாள நடிகராக தான் இருக்கிறாராம். சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரியஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது குறித்து கீதா சரஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இது தன்னுடைய கணவர் மற்றும் மகன் சாணக்யாவை பற்றி இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் அமைதியின் சிகரமாகவே அண்ணன் பேச்சை தட்டாதே அருணாக இருந்து வரும் சாணக்கியன் நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் இல்லையாம்.
சமீபத்தில் நடிகர் சாணக்கியன் லயோலா காலேஜில் பட்டம் வாங்கியிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட கீதா சரஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகன் அருணை பாராட்டி இருந்தார். அதுபோல அருண் மற்றும் ஆதிரை இருவரும் காதல் செய்யும் ட்ராக் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி இருந்தார்.












Click it and Unblock the Notifications