இது "அபத்தம்” இப்படி செய்யக்கூடாது.. கிழித்தெடுத்த எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. அதுக்காக இப்படியா?
எதிர்நீச்சல் ஜான்சி ராணி புடவை தான் பெண்களுக்கு அழகு என கூறியிருக்கிறார்.
சென்னை:எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வரும் விஜே காயத்ரி கிருஷ்ணன் சில பெண்களை திட்டி இருக்கிறார்.
சமூகத்தில் தற்போது எதுவும் செய்யத் தெரியாது என்று சொல்வது பேஷன் ஆக மாறிவிட்டது என்று வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இப்போது வரும் நடிகைகளில் சிலர் செய்யும் செயல்கள் தனக்கு கடுப்பாக இருக்கிறது என்று விஜே காயத்ரி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

ஜான்சி ராணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்ற சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. விறுவிறுப்பு குறையாமல் இந்த சீரியலில் கொண்டு போய்க் கொண்டிருக்கும் கேரக்டராக குணசேகரன் மாஸ் காட்டி இருந்த நிலையில், தற்போது குணசேகரனுக்கு டஃப் கொடுக்கும் கேரக்டராக ஒரு சில வாரங்களாக ஜான்சி ராணி கேரக்டரில் நடிகை மற்றும் தொகுப்பாளர் காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

ஜான்சி ராணியின் கேள்வி
ஒரு மாடலிங் பெண்ணாகவும் நடிகையாகவும் இருந்து வரும் காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மனதில் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார். அந்த வகையில் இப்போது வரும் பெண்கள் மற்றும் நடிகைகள் பலர் எதையும் செய்ய தெரியாது என்று சொல்வதில் பேஷனாக இருக்கிறார்கள். சமைக்க தெரியாது, தமிழ் பேச தெரியாது என்பது அவர்களுக்கு ஒரு ஸ்டைலாக இருக்கிறது. ஆனால் இது எல்லாம் ஒரு அபத்தமான செயல் என்பது அவர்களுக்கு புரியவில்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்.

வெட்டி பந்தா தான்
நானும் நடிக்கிறேன் என்னுடைய வீட்டை கவனிக்கிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறேன். வீட்டில் நான் தான் பாத்திரத்தை கழுவுகிறேன். துணிகளை மடித்து வைப்பேன் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறேன். வெளியேயும் நடித்துக் கொண்டும் இருக்கிறேன் ஆனால் சிலர் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் வீட்டில் எதுவும் செய்ய மாட்டேன் என்று ஸ்டைலாக இருக்கிறார்கள். இது எல்லாம் ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் மட்டும்தான் என்று கூறி இருக்கிறார்.

புடவை தான் பெஸ்ட்
அது மட்டுமல்லாமல் புடவை கட்டுவது தான் பெண்களுக்கு அழகு. எனக்கு புடவை கட்டுவது தான் ரொம்பவே பிடிக்கும். எனக்கு ஆயிரக்கணக்கில் புடவைகள் இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் புடவையை எடுத்து குவிப்பதில் என்னுடைய மனம் சந்தோஷப்படுகிறது. அதை பார்த்து பார்த்து கட்டுவதும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். புடவையில் தான் ரொம்பவே அழகு இருப்பதாக நான் பீல் பண்ணுகிறேன். என்னிடம் 100 ரூபாயிலிருந்து பல ஆயிரம் கணக்கிலும் புடவைகள் இருக்கிறது. ஆனால் பலர் புடவை கட்டுவதையே கேவலமாக நினைக்கிறார்கள். ஆனால் அதில் தான் அழகு, கவர்ச்சி எல்லாமே இருக்கிறது என்பது தெரியவில்லையா? என்று இவர் பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து குணசேகரனின் தங்கச்சி ஜான்சி ராணி என்பதை அப்படியே நிரூபிக்கிறாரே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications