எதிர்நீச்சல்: பரிதாப கோலத்தில் நந்தினி.. மனம் மாறிய கதிர், ஞானம்.. தர்ஷினி விஷயத்தில் கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 12ஆம் தேதி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்த கதிர், ஞானம் தர்ஷினுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் நந்தினி மற்றும் ரேணுகாவை போலீஸ் கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தர்ஷினி காணாமல் போனதால் தர்ஷினையை கடத்தி வைத்த ரவுடி கும்பலின் தலைவன் கடும் கோபத்தில் அங்கிருக்கும் ரவுடிகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

 Ethirneechal Serial 12th february 2024 promo full review

அந்த வகையில் மூன்று வாரங்களுக்கு மேலாக தர்ஷினி காணாமல் போயிருக்கும் நிலையில் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது ஈஸ்வரியும் ஜீவானந்தம் தான்... அவருக்கு துணையாக இருப்பது நந்தினி, ரேணுகா, ஜனனி தான் என்று குணசேகரன் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கும் நிலையில் நீதிமன்றத்தில் எதிர்நீச்சல் பெண்களுக்கு போலீஸ் காவல் கொடுத்திருக்கிறது.

எதிர்நீச்சல் பெண்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அப்போதுதான் தர்ஷினி எங்கே இருக்கிறார் என்ற உண்மை எங்களுக்கு தெரிய வரும் என்று சொல்லியிருந்த நிலையில் போலீசுக்கு சாதகமாக நீதிபதியும் எதிர்நீச்சல் பெண்களை 10 நாட்களுக்குள் போலீஸ் காவலில் வைக்கும்படி ஆணையிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் நந்தினி மற்றும் ரேணுகாவை அழைத்து போலீசார் அடித்து சித்திரவதை செய்கின்றனர்.

 Ethirneechal Serial 12th february 2024 promo full review

அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கதிர், ஞானம், தர்ஷன், சக்தி போன்றோர் அடிபட்டு முகம் எல்லாம் காயத்தோடு நடக்க கூட முடியாமல் வந்த நந்தினி பார்த்து அதிர்ச்சியாகின்றனர். அப்போது கதிர் பதறி போய் நந்தினிக்கு கை கொடுத்து தாங்கி பிடிக்கிறார். மறுபக்கத்தில் தர்ஷினி ரவுடிகளிடமிருந்து தப்பித்து ஓடிப் போய்விட்டதால் ரவுடிகளின் தலைவன் குதிரை வந்து அங்கிருந்த ரவுடிகளை திட்டுகிறார்.

 Ethirneechal Serial 12th february 2024 promo full review

ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணு அழகா ஸ்கெட்ச் போட்டு நம்ம கிட்ட இருந்து தப்பிச்சு போயிருக்கா அவளை விட்டுட்டு நீங்க வாய் பேசுறீங்களா என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இந்த ப்ரோமோ அதிக அளவில் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே தர்ஷினி காணாமல் போனதும் முதல் முதலாக ஜனனிதான் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார்.

அதற்கு பிறகு தான் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை போலீஸ் விசாரித்து இருந்தனர். ஆனால் அந்த கேஸ் கிடப்பில் கிடக்கும்போது அதை தொடர்ந்து குணசேகரன் கொடுத்த கேசுக்கு மட்டும் இவ்வளவு சீக்கிரமாக விசாரணை நடத்துகிறார்கள்... அதோடு நீதிமன்றத்தில் கூண்டில் இருந்த பெண்களிடம் எதுவுமே நீதிபதி கேட்கவில்லையே? எந்த நீதிமன்றத்தில் இருந்தாலும் சரி குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமும் அவர்களுடைய கருத்தை கேட்பது முக்கியமான நடக்கும்.

 Ethirneechal Serial 12th february 2024 promo full review

ஆனால் போலீஸ்காரர்கள் மற்றும் எதிர் தரப்பு வக்கீல் சொன்னது அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக நீதிபதியும் செயல்படுவது பார்க்கும் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. அதிலும் இன்று நான்கு பேர் இருக்கும்போது அதில் நந்தினி மற்றும் ரேணுகாவை போலீஸ் அடித்து உதைத்து இருக்கிறது. இது அவர்களுடைய கணவருக்கு இவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டு சக்தியும் ஞானமும் திருந்துவதற்காக இருந்தாலும் சரி, ஆனால் பார்ப்பதற்கு லாஜிக் ரொம்பவே மிஸ் ஆகிறது.

 Ethirneechal Serial 12th february 2024 promo full review

எதிர்நீச்சல் சீரியல் மற்ற சீரியல்களை ஒப்பிடும்போது தனித்து இருந்ததால்தான் இத்தனை நாட்களாக இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த சீரியலும் மற்ற சீரியல் போலவே லாஜிக்கை உடைத்து கதையை ஜவ்வு போல இழுத்துக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கருத்தில் கமெண்டில் சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+