ஆதிரைக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கும் குணசேகரன்..அதிர்ச்சி கொடுத்த சாருலதா..பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று விட்டது.
இந்த நிலையில் ஆதிரைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து இருக்கும் புகைப்படத்தை குணசேகரன் காட்டுகிறார்.

குணசேகரன் காட்டிய புகைப்படத்தை பார்த்து வீட்டில் இருக்கும் மொத்த மருமகள்களும் கோபத்தில் இருக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில், நிச்சயதார்த்தம் சண்டை சச்சரவுகளோடு நின்று போயிருக்கிறது. இதில் யாரும் தப்பை ஏற்றுக் கொள்ளாமல் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சொத்து மற்றும் 40% ஷேரால் அடுத்தடுத்த பல பிரச்சனைகளும் கலவரங்கள் தான் நடக்கிறது.
இந்த நிலையில் குணசேகரன் அப்பத்தா தனக்கு எழுதி தருவதாக சொன்ன 40% ஷேரை எழுதிக் கொடுக்க சொல்லி நிச்சயத்தை நிறுத்தி வைக்க அப்பத்தா இப்போதைக்கு என்னுடைய ஷேர் எழுதிக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனால் குணசேகரன் இந்த நிச்சயம் நடக்காது என்று உறுதியாக சொல்ல, எஸ்கேஆர் குடும்பம் கோபத்தில் அங்கிருந்து வெளியேறுகிறது. இதனால் கோபமான விசாலாட்சி மனுஷங்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் என்று திட்டுகிறார். அதற்கு அப்பத்தா என்ன விசாலாட்சி பேசி முடிச்சிட்டியா? என்ன பதிலடி கொடுக்கிறார்.

பிறகு ஜனனி சாருலதாவிற்கு போன் செய்து நான் ஜனனி பேசுகிறேன் என்று சொல்ல, இன்னும் பேச என்ன இருக்கு என்று சாருலதா போனை கட் செய்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்தில் ஞாயிற்று கிழமையில் ஒரு மணி எபிசோடு நடக்க போவதாகவும் அதற்கு ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரையிடம் குணசேகரன் இனி அருணை மறந்து விடு, இந்த மாப்பிள்ளையை தான் நீ கட்டிக்க வேண்டும் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரேணுகா இது என்ன புது மாப்பிள்ளையைா இருக்கு என்று அதிர்ச்சியாகி கேட்கிறார். பிறகு கல்யாணமும் அவர் இஷ்டத்துக்கு தான் பண்ணனுமா? பாத்துருவோம் இனி என்ன நடக்கப் போகிறது என்று, என மொத்த மருமகள்களும் ஒன்று சேர்ந்து ஆதிரைக்கு ஆதரவாக நிற்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications