ஈஸ்வரியிடம் பழைய காதலை புதுப்பிக்கும் ஜீவானந்தம்.. அப்பாவின் பதிலடி..குணசேகரனுக்கு தெரியவரும் உண்மை?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஜீவானந்தத்தின் முன்னாள் காதலித்தான் ஈஸ்வரி என்ற ரகசியம் நேற்று எபிசோடில் வெளிவந்தது.

இந்த நிலையில் ஈஸ்வரியின் அப்பா ஜீவானந்தத்தை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார். அதோடு என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் செய்திகள் இருந்து வருகிறது. இந்த சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜீவானந்தம் ஈஸ்வரியின் அப்பா தோட்டத்தில் வைத்து அவருடைய பிஏவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரியும் அவருடைய அப்பாவும் யார் இவர் இங்கே எதற்காக வந்திருக்கிறார் என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி இவர்தான் ஜீவானந்தம் என்று சொல்ல, ஈஸ்வரியின் அப்பா நான் போய் பேசிட்டு வருகிறேன் என்று ஈஸ்வரியை அங்கேயே இருக்க சொல்லி விட்டு வருகிறார். அப்போது ஈஸ்வரியின் அப்பா ஜீவானந்தத்திடம் எதுக்காக இங்க வந்து இருக்கீங்க இங்க இந்த இடத்தையும் அபகரித்து எடுக்கலாம்னு பாத்திருக்கீங்களா? நான் இது சொந்தமா கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குன இடம் என்று சண்டை இடுகிறார்.
அதற்கு ஜீவானந்தம் நான் பக்கத்தில் ஒரு இடத்தை பார்ப்பதற்காக வந்தேன். அந்த இடத்துக்காரங்க உங்ககிட்ட பேசினா சரியா இருக்கும்னு சொன்னாங்க. அதான் தேடி வந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே இருந்த ஈஸ்வரி அப்பா ஜீவானந்தத்தோடு சண்டை போடுவதாக நினைத்துக்கொண்டு வேகமாக ஓடி வர ஈஸ்வரியை பார்த்ததும் ஜீவானந்தம் அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு இது உங்க அப்பாவா? இது உங்க இடம் தானா? என்று கேட்க, ஈஸ்வரி ஜீவானந்தத்தை நீங்க எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க
அடுத்தவங்க சொத்து அபகரிக்கிறது ரொம்பவே தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்க நான் உங்ககிட்ட தனியா பேசணும் என்று ஜீவனாந்தம் சொல்கிறார். அதற்கு ஈஸ்வரியின் அப்பா முடியாது என்று சொல்ல மீண்டும் மீண்டும் ஜீவானந்தம் நான் உங்ககிட்ட தனியா நிறைய பேச வேண்டியது இருக்கு என்று சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரியும் சரி என்று சொல்லி ஜீவானந்தத்திடம் பேசுகிறார். அப்போது ஜீவானந்தம்," ஈஸ்வரி காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது சுவற்றில் சித்தாந்தம் எழுதிக் கொண்டு இருந்த நபரை பார்க்கும்போது மனதுக்குள் ஏற்பட்ட பூரிப்பு பிறகு அந்த நபர் ஈஸ்வரியின் அப்பாவிடம் சென்று பொண்ணு கேட்டது முதலியவற்றை சொல்லி நீங்க குணசேகரனை கல்யாணம் செய்த பிறகு அந்த நபரை மறந்திருப்பீங்க ஆனா அந்த நபர் எங்கேயாவது ஒரு இடத்துல இருக்க தான் செய்வார் அவருடைய பெயர் ஜீவானந்தம் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியாகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து ஜீவானந்தம் போனதும் ஈஸ்வரி அழுது கொண்டு இருக்க அங்கே வந்த ஈஸ்வரியின் அப்பா என்ன ஆச்சு, அவன் என்ன சொன்னான் என்று கேட்க? ஈஸ்வரி, ஒன்னும் சொல்லவில்லை. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்று மட்டும் சொல்லிவிட்டு போகிறான் என்று பொய் சொல்கிறார். எதைத் தொடர்ந்து ஈஸ்வரியின் அப்பா ஈஸ்வரிக்கு சமாதானம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
எப்படி இருக்கையில் குணசேகரனின் வீட்டில் கதிர் தனக்கு தலை வலிக்கிறது என்று நந்தினியிடம் டீ கேட்பதற்காக கூப்பிட்டுக் கொண்டிருக்க அங்கே ரேணுகா ஆன்லைன் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் அங்கு வந்து பிரச்சனை செய்ய, நந்தினி நக்கலாக பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் ரேணுகா கிளாஸ் எடுப்பது ஞானத்திற்கும் கதிருக்கு தெரியாமல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஜீவானந்தத்தின் முன்னாள் காதலித்தான் ஈஸ்வரி என்ற ரகசியம் குணசேகரனுக்கு தெரிய வந்தால் என்ன மாதிரி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications