ஜீவானந்தம் சொன்ன “அந்த” பெயர்.. கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி.. குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஏற்கனவே அனைவரும் கணித்திருந்த ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி பற்றிய ரகசியம் வெளிவந்திருக்கிறது

ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்று தெரிய வந்திருக்கும் நிலையில் கதிர் வீட்டு பெண்களிடம் பிரச்சனை செய்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஜனனி சக்தி தனக்கு கொடுக்கும் டேட்டா படி இனி நான் ஜீவானந்தத்தை நானே நேரடியாக சந்திக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு நந்தினி நானும் உன்னோடு வருகிறேன் என்று சொல்ல அதை ஜனனி மறுத்திருக்கிறார்.
எந்த பிரச்சனை வந்தாலும் அது என்னோடு போகட்டும். அதில் நம்ம குடும்பத்தை எல்லாரையும் சேர்த்து இழுத்து விட வேண்டாம் என்று ஜனனி சொல்ல, அதை கேட்காத நந்தினி நான் உனக்கு சப்போர்ட் ஆக வருவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆடிட்டர் உடன் வந்த வழக்கறிஞர் ஜீவானந்தத்திற்கு எதிராக நாம கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணுவோம். அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அப்பத்தா கண் முழித்து விட்டால் அப்பத்தாவை வைத்து நாம ஜீவானந்தம் பிரச்சனையை முடித்து விடலாம் என்று குணசேகரனுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஈஸ்வரி தன்னுடைய அப்பாவோடு தன்னுடைய கிராமத்தில் உள்ள இடத்திற்கு போயிருக்கிறார். அங்கு தன்னுடைய பழைய சொத்து மீண்டும் தங்களுக்கு வந்துவிட்டது என்று அப்பாவும் மகளும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் வருகிறது, அதிலிருந்து ஜீவானந்தம் இறங்கி வருகிறார். அதே நேரத்தில் அது யார் என்று ஈஸ்வரியும் பார்க்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்து இருந்தது.
அதைத்தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் வீட்டில் கதிர் கத்திக் கொண்டிருக்க அதற்கு ஜனனி கோவமாக என்ன வேணும் உங்களுக்கு என்று கேட்க, அதற்கு 5 கோடி பணம் வேணும் போய் எடுத்துட்டு வா போ என்று கத்த, அதற்கு நந்தினி சொத்து எல்லாம் போகப் போகுதுன்னு தெரிஞ்சு போச்சா உங்களுக்கு? இவகிட்ட வந்து கடன் கேக்குறீங்க, என்று நக்கல் அடிக்க அதற்கு கதிர் நந்தினியை அடிக்க வருகிறார்.
அடுத்ததாக ஈஸ்வரியை சந்திக்கும் ஜீவானந்தத்திடம், "நீங்க பண்றது எதுவுமே சரி இல்ல எரிச்சலா இருக்கு" என்று கோபமாக பேச, அதற்கு ஜீவானந்தம் "ஈஸ்வரிக்கு இப்படி எல்லாம் கோபமே வராது" என்று சொல்லி "உங்க அப்பா உங்களுக்கு குணசேகரனை கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.
அதுக்கப்புறம் நீங்க அந்த பையனை நினைத்து இருக்க வாய்ப்பு இல்ல. அவன் பேரு ஜீவானந்தம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோடு பார்க்க ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications