எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு தெரியாமல் ஜெயிலில் மாட்டிய கதிர்.. ஜீவானந்தத்தால் அதிர்ச்சியில் ஜனனி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனுக்கு தெரியாமல் கதிர் செய்த செயல் குறித்து வளவன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் ஜனனி ஜீவானந்தத்தை தேடி கிராமத்துக்கு சென்றிருந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இன்று வெளியான ப்ரோமோவில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக வளவன் மற்றும் கதிர் இருவரும் காரில் கிளம்பி இருந்தனர்.

அவர்கள் இன்றைய ப்ரோமோவில் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது வளவன் கதிரிடம்," நீ குற்றாலத்தில் போய் கூடி கும்மி அடிச்சதும் தெரியும். உன் அண்ணனுக்கு கூட தெரியாம ரெண்டு நாளு ஜெயிலில் இருந்ததும் எனக்கு தெரியும்" என்று சொல்ல, கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து ஜீவானந்தத்தை தேடிப்போன ஒரு நபர் வந்து பேசுகிறார். அவரிடம் ஜனனி," எனக்கு ஜீவானந்தத்தை பற்றி எதுவும் தகவல் கிடைக்காமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன்" என்று சொல்ல, அதற்கு அந்த நபர் நீங்க நெனச்ச நேரத்துல எல்லாம் அவரை பார்க்க முடியாதும்மா... அது யாராயிருந்தாலும் சரி, என்று சொல்ல ஜனனி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது.

ஏற்கனவே ஜீவானந்தத்தை கொலை செய்ய நெருங்கியாச்சு என்று வளவன் கூறி இருக்கும் நிலையில் ஜீவானந்தம் அவருடைய கூட்டத்திடமிருந்து தனக்கு பர்சனல் வேலை இருக்கிறது என்று சொல்லி தனியாக போயிருக்கிறார். அதே நேரத்தில் அதே ஊரில் ஜனனியும் இருப்பதால் இவர்கள் மூவரும் சந்தித்துக் கொள்வார்களா? இல்லை வேற எதுவும் நடக்கப் போகிறதா என்று அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற யூகிக்க முடியாத அளவில் இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications