எதிர்நீச்சல்: நிராயுதபாணியாக ஜீவானந்தம்.. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. திக் திக் நிமிடம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 18ம் தேதிக்கான எபிசோடில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது.
குணசேகரன் வழக்கம்போல அப்பத்தாவை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்த நிலையில் கடைசியில் அவருக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அதுபோல ஜீவானந்தம் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவருடைய மகள் செய்த செயலால் ஜீவானந்தத்துக்கு பெரிய சிக்கல் வர இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. காட்சி அமைப்புகளும், கதைக்களமும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அரை மணி நேரம் ஒரு நாள் எபிசோட்டுக்கு எங்கே போனது என்று தெரியாமல் வேகமாக ஓடி விடுகிறது.

இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டை போலவே இன்றும் குணசேகரன் அப்பத்தாவை பேச சொல்லு என்று கத்திக்கொண்டே இருக்கிறார். நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் குணசேகரனிடம் எத்தனையோ முறை கத்தாதீங்க அப்பத்தாவுக்கு ஏதாவது ஆகிவிடப்போகிறது என்று கூறிக் கொண்டிருந்தாலும் மேலும் மேலும் குணசேகரன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
மதுரைக்குள்ள நான் எவ்வளவு மரியாதையா இருந்தேன். ஒரே நாளில் என் மரியாதை எல்லாம் போயிடுச்சு. நான் கஷ்டப்பட்டு உழைத்த என் சொத்துக்கெல்லாம் பங்குக்கு ஒருத்தன் வந்து நிற்கிறான். இந்த வீட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டுனேன் இந்த வீட்டில இன்னொருத்தன் வர விடுவேனா? ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் இந்த கிழவியை வந்து பார்த்துகிட்டே இருந்தேன்.

இந்த கெழவிக்காக ராத்திரி ஏன் தூக்கத்தை கெடுத்து கால் அமுக்கிவிட்டேன். எல்லாம் இவ மேல பாசமா இல்லவே இல்ல .என் சொத்து எனக்கு வேணும் அதுக்காகத்தான். இப்போ கண்ணு முழிச்சு ஒன்னும் பேசாம கல்லு மாதிரி இருக்கா...? ஏதாவது பேசு கிழவி. நீ பேசலனா எனக்கு ஏதாவது ஆயிரும். பிறகு உன்னையும் என்னையும் ஒரே குழியில தான் போடுவாங்க என்று அடுக்கடுக்க வசனங்களை குணசேகரன் பொழிந்து கொண்டிருக்க, கரிகாலன் குணசேகரனை தடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் காட்டுக்குள் நடந்து வந்து கொண்டிருந்த ஜீவா வீட்டிற்கு வருகிறார். அங்கே அவருடைய மகள் வெண்பா ஜீவானந்தத்தை நினைத்து பார்த்துக் கொண்டே தனியாக அமர்ந்திருக்கிறார். அவருடைய மனைவி கயல்விழி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவானந்தம் வெண்பாவை பின்னாடி இருந்து கூப்பிட்டு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு வெண்பாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய வெண்பா கோபப்பட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு நீங்க எப்பவும் என் கூட தான் இருக்கணும் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து வெண்பாவை சமாதானம் செய்வதற்காக ஜீவானந்தம் முயற்சி செய்யும்போது அவருடைய இடுப்பிலிருந்து துப்பாக்கி கீழே விழுந்து விடுகிறது. அந்த துப்பாக்கியை பார்த்ததும் இது எதற்காக நீங்க வச்சிருக்கீங்க என்று வெண்பா கேட்க,
அதற்கு ஜீவானந்தம் கெட்டவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காகத்தான் என்று சொல்ல கெட்டவர்கள் என்றால் யார் என்று கேட்க நம்ம வீட்டிற்கு வந்து யாராவது மிரட்டினால் அவர்கள் தான் கெட்டவர்கள் என்று சொல்ல நம்ம வீட்டுக்கு வந்து யாரும் மிரட்ட மாட்டாங்க போ என்று சொன்னால் போயிடுவாங்க என்று சொல்லி அந்த துப்பாக்கி தூக்கிக் கொண்டு ஓடி போய் மாடியில் இருக்கும் மறைவிலிருந்து ஜன்னல் வழியாக கீழே தூக்கி வீசி விடுகிறார்.

பிறகு ஜீவானந்தமும் சரி துப்பாக்கி போகட்டும் என்று வெண்பாவை சமாதானம் செய்து வைக்கிறார். அடுத்ததாக கயல் விழியும் ஜீவானந்தமும் பேசிக் கொண்டிருக்கையில் நான் உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா வெண்பாவுக்கு இதெல்லாம் தெரியாததால் உங்களை ரொம்பவே மிஸ் பண்றா என்று ஜீவானந்தத்திடம் சொல்லிக் கொண்டிருக்க ஜீவானந்தமும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கதிர் வளவன் குரூப் ஜீவானந்தம் வீட்டை நெருங்கி விட்டனர். அது போல ஜனனியும் ஜீவானந்தத்தை தேடி வந்து கொண்டே இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் குணசேகரன் அப்பத்தா முன்பு கத்திக்கொண்டே இருக்க தர்ஷினி நீங்க எல்லாருடைய உரிமையிலும் தலையிடறீங்க அப்பா என்று சொன்னதால் குணசேகரன் தர்ஷினியை அடிக்க பாய்கிறார். பிறகு அங்கு வரும் ஆடிட்டர் மற்றும் வக்கீல் இடம் நீங்களே இந்த அப்பத்தா கிழவி கிட்ட பேசி எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கோங்க என்று குணசேகரன் சொல்ல, ஆடிட்டர் அப்பத்தாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். ஆனால் அப்பத்தா எதுவும் ஞாபகம் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆக எபிசோடு முடிவடைந்தது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications