எதிர்நீச்சல்: குணசேகரன் மீது கொலவெறியில் ஜீவானந்தம்.. ஜனனி சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கதிர்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்திற்கு தன்னுடைய மனைவி கயல்விழியை கொலை செய்தது இப்போது வந்த புது எதிரி தான் என்று தெரிந்து இருக்கிறது.
அதே நேரத்தில் ஜீவானந்தம் பற்றிய பல உண்மைகளை தெரிந்து கொண்ட ஜனனி மனம் மாறி கதறி அழுகிறார்.

இந்த நிலையில் கதிர் வளவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தின் மனைவி துப்பாக்கி சூடுபட்டு இறந்து கிடக்க, அதை பார்த்து ஜீவானந்தமும் அவருடைய மகளும் அழுது கொண்டிருக்க இதை பார்த்த ஜனனி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
அதைத்தொடர்ந்து இதை யாராவது பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று வளவன் அங்கிருந்து கதிர் மற்றும் தன்னுடைய கும்பலை கூட்டிக்கொண்டு செல்கிறார். இதை பார்த்து கடுப்பான கதிர் முதல் நாளிலிருந்து எனக்கு உன் மேல் பெரிய சந்தேகம் இருந்துச்சு. அல்வா மாதிரி கிடைச்சான் ஒழுங்கா பார்த்து சுட தெரியல நீ எல்லாம் ஒரு போலீஸ்காரனா? என்று கண்டபடி திட்டுகிறார்.
அதனால் கோபமான வளவன் கதிரை நோக்கி துப்பாக்கி வைத்து சுட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு தைரியமாக சுடு பாப்போம் சுடு பாப்போம் என்று கத்திக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஜீவானந்தம் தன்னுடைய மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்து முடிக்கிறார்.

அப்போது கூடவே இருந்த ஜனனி நான் உங்களை இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று கொஞ்சம் கூட நிலைக்கல. நான் ஏதேதோ நினைச்சு வந்தேன். ஆனா இங்கே என்னென்னமோ நடந்துச்சு என்று சொல்லி ஜீவானந்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உங்களுக்கும் அப்பத்தாவுக்கும் இருக்கும் உறவு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது ஆனா நீங்க தப்பானவர் இல்லை என்பது மட்டும் இப்போ எனக்கு புரியுது நான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டேன் என்று பீல் பண்ணி பேசுகிறார்.
அதற்கு ஜீவானந்தம் நான் யாருக்கும் எதுவும் புரிய வைக்க விரும்பல. நீ நல்ல பொண்ணு உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் யாருக்கும் நான் பயப்படவும் மாட்டேன். கட்டுப்படவும் மாட்டேன். என்னுடைய மனைவிக்கு மட்டும் தான் நான் கட்டுப்பட்டேன் என்று தன்னுடைய மனைவியை சந்தித்தது குறித்தும் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றியும் ஜனனியிடம் ஜீவானந்தம் கூறுகிறார்.

அத்தோடு என் எதிரிகள் யாரும் இதுவரைக்கும் என்னுடைய குடும்பம் மீது இப்படி கைவைத்தது கிடையாது. ஆனால் இது யாரோ புது எதிரி. அவங்கள சும்மா விடமாட்டேன். இங்க வந்தது கூலிகள் தான். இவனுகளை ஏவி விட்டவனை நான் விடமாட்விடமாட்டேன் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அப்பத்தாவை அறைக்குள் பூட்டி வைத்த குணசேகரனிடம் விசாலாட்சி ரேணுகா எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு குணசேகரன் என்னை பத்தி உங்களுக்கு தெரியாது நான் யாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு தெரியும் என்று கெத்தாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இந்த நிலையில் ஜனனியால் ஜீவானந்தத்தை கொலை செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் ஜீவானந்தம் மனைவியை நான்தான் கொன்னேன் என்பது ஜனனிக்கு தெரியாது என்று கதிர் இன்றைய ப்ரோமோவில் குணசேகரனிடம் கூறியிருக்கிறார்.
அதுபோல நந்தினியின் பேச்சைக் கேட்டு குணசேகரனை எதிர்ப்பது போன்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி சண்டை போடுகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இனி ஜீவானந்ததோடு சேர்ந்து ஜனனியும் குணசேகரன் மற்றும் கதிருடைய கொட்டத்தை அடக்க புது பிளான் போட்டு அதற்கான பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜீவானந்ததுடைய குடும்ப நிலைமையை பற்றி ஈஸ்வரி இடம் ஜனனி சொல்லும் போது ஈஸ்வரி என்ன மாதிரி முடிவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications