குணசேகரனால் ஆபத்தான நிலையில் அப்பத்தா.. ஜனனியிடம் ஜீவானந்தம் சொன்ன வார்த்தை.. நெருடலான தருணம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தத்தை தொடர்ந்து குணசேகரனால் அப்பத்தாவிற்கும் ஆபத்து வந்திருக்கிறது.

அதே நேரத்தில் ஜனனியிடம் ஜீவானந்தம் பல உண்மைகளை பற்றி பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்று தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வருகிறது. அடுத்து என்ன மாதிரி கதை நகர போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் ரசிகர்கள் திணறிக் கொண்டு வரும் நிலையில் இன்று எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் யோசிக்காத செயலை குணசேகரன் செய்கிறார்.

அதாவது நேற்றைய எபிசோடில் தாராவை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டு விடுவேன் என்று மிரட்டிய குணசேகரன் அப்பத்தாவை ஜீவானந்தத்திற்கு எதிராக எழுதிய கம்ப்ளைன்ட் பேப்பரில் கையெழுத்து போட சொல்லி குணசேகரன் மிரட்ட, குணசேகரனை பார்த்து பயந்து போன நந்தினி அப்பத்தாவிடம் கையெழுத்து போட்டு விட சொல்லி கெஞ்சுகிறார்.
இதனால் வேறு வழி இல்லாமல் அப்பத்தா கம்ப்ளைன்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார். அதே நேரத்தில் நான் ஜீவானந்தத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பியாச்சி, என்னுடைய ஆட்கள் ஜீவானத்தை சுட்டு வீழ்த்தி விடுவார்கள் என்று குணசேகரன் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் கதிர் மற்றும் வளவன் குரூப் ஜீவானந்தன் வீட்டிற்கு சென்று அடித்து பிரச்சனை செய்யும் போது ஜீவானந்தத்திற்கு பதிலாக அவருடைய மனைவி கயல்விழியை சுட்டு விடுகிறார்கள் அப்போது அங்கு வந்த ஜனனி அடியாள்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது ஜீவானந்தம் மனைவி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுகான பிரமோ வெளியாக இருக்கும் நிலையில், குணசேகரனிடம் ரேணுகா எதுக்காக அப்பத்தாவை ரூமுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்கீங்க என்று கேட்க, அதற்கு குணசேகரன் "உங்களுக்கு குணசேகரனை பத்தி எல்லாம் தெரியாது. பேசாம நில்லுங்க" என்று மிரட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் தன்னுடைய மனைவியின் உடலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கு குழந்தையோடு பாவமாக நிற்க, அப்போது ஜனனி "ஆனா இப்போ ஒரு விஷயம் தெளிவா புரியுது. நீங்க தப்பானவர் இல்லை என்று சொல்ல, அதற்கு ஜீவானந்தம்," இப்ப கூட உனக்கு தெரிஞ்சது முக்கால்வாசி உண்மைகள் மட்டும்தான்" என்று கூறுகிறார். இந்த நிலையில் இனி ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? அதுபோல ஜீவானந்தம் எப்படி குணசேகரனை அடக்கி வைக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications