எதிர்நீச்சல் எபிசோடு: கொலவெறியில் ஜீவானந்தம்.. குணசேகரனுக்கு கதிரால் வரும் அழிவு.. அப்பத்தா முடிவு?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் தன்னுடைய மனைவியை யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க போவதாக ஜனனியிடம் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் பற்றியும் நடந்தது எல்லாம் நினைத்து நினைத்து ஜனனி அழுது கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கதிரால் குணசேகரனுக்கு புதிய பிரச்சனை வர இருக்கிறது. நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எபிசோடின் ஆரம்பத்தில் குணசேகரன் அப்பத்தாவை மிரட்டி கையெழுத்து வாங்கி ரூமுக்குள் அடைத்து வைத்திருக்கிறார். இதற்கு ரேணுகா, நந்தினி, விசாலாட்சி எல்லோரும் குணசேகரனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, குணசேகரன் யாரையும் பார்க்க முடியாது என்று அங்கிருந்து அனைவரையும் துரத்தி விடுகிறார்.
அதோடு ரேணுகா, நந்தினி இடம் இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட புருஷன் வந்து விடுவான். அவனை நீ என் பக்கம் திருப்பி விட யோசி என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார். அதற்கு நந்தினி என்னோட புருஷனால தான் உங்க கழுத்துக்கு கத்தி வரப்போகுது என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்புகிறார். பிறகு குணசேகரனுக்கு கதிரிடம் இருந்து போன் வருகிறது.
அதில் ஒரு பெரிய தப்பு நடந்து விட்டது ஜீவானந்தத்தை சுட சொன்னா அந்த கிள்ளிவளவன் அவனுடைய பொண்டாட்டியை சுட்டுட்டான். 10 அடி தூரத்தில் இருந்தவனை சரியா சுட முடியாம விட்டுட்டான் என்று நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொல்ல, அதற்கு குணசேகரன் என்னது அவனுக்கு குடும்பம் இருக்கா? என்று ஆச்சரியமாக கேட்கிறார். பதிலுக்கு கதிர் குடும்பத்தை இந்த உலகத்துக்கே தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறான்.
ஜீவானந்தம் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என்ன இழுத்து வந்துட்டாங்க என்று சொல்ல, அதற்கு குணசேகரன் சரி அதுவும் ஒரு வகைகளில் நல்லது தான். யாரும் உன்னை பார்க்கல தானே? என்று கேட்க, பதிலுக்கு கதிர் ஆமாம் யாரும் என்ன பாக்கலை. ஆனால் அந்த ஜனனி உள்ள வந்து எல்லாத்தையும் சொதப்பிட்டா.
இருந்தாலும் அவளும் என்ன பாக்கலை என்று சொல்ல, என்னது ஜனனி அங்கு வந்தாளா? என்று குணசேகரன் அதிர்ச்சி அடைய பிறகு சரி இங்க வந்து யார்கிட்டயும் எதையும் சொல்லாத ஆடிட்டர் வக்கீல் வைத்து அப்பத்தா கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருக்கேன் என்று அப்பத்தா சரியான விஷயத்தைப் பற்றி சொல்ல, என்னது பட்டு கோமாவில் இருந்து எழுந்துட்டாளா? என்று கதிர் சந்தோஷத்தோடு ஆச்சரியம் கலந்து கேட்கிறார்.
அடுத்ததாக வீட்டு வாசலில் நந்தினி, ஆதிரை, ரேணுகா அமர்ந்திருக்க சக்தியும் அங்கு நின்று கொண்டிருக்க அப்போது அவர்களிடம் கரிகாலன் காப்பி கேட்டு பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கதிர் வீட்டிற்கு வர நந்தினி எங்க போயிட்டு வரீங்க? நீங்க முழுசா வருவீங்களா இல்லையானு தெரியாம ரெண்டு நாளா பயந்துகிட்டு இருந்தேன். உங்க அண்ணன் கையை ஓங்கிட்டு வர்றாரு. அது மட்டும் இல்லாம உங்களை வேட்டை நாய்னு சொன்னாரு. அவருக்கு உங்க மேல பாசம் எல்லாம் கிடையாது.
அவர் என்னை எவ்வளவு அசிங்கமா பேசினாரு தெரியுமா? நீங்க இருக்கும்போதே அவர் அப்படி பேசினாருன்னா அப்போ உங்களுக்கு என்ன மரியாதை? என்று கேட்டு கதறி அழுகிறார். அதோடு நான் நினைச்சிருந்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருப்பேன். நீங்க வந்து எனக்காக பேசுவீங்கன்னு தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்க கூட கொஞ்ச வருஷம் வாழ்ந்து இருக்கேன். ஒரு ஓரத்திலாவது ஒரு உறுத்தல் இல்லையா?
எல்லாத்தையும் விட்டுடலாம் ஆனால் நீங்க பொணமா தான் வீட்டுக்கு வருவீங்கன்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்ன பத்தி ஏதாவது சொன்னா உங்களுக்கு வலிக்குமானு தெரியல. ஆனா உங்கள பத்தி சொன்னது எனக்கு வலிச்சுது. நீங்க பிணமா வருவீங்கன்னு சொல்ற அளவுக்கு எங்க போனீங்க? சொல்லுங்க? என்று அழுதபடியே கேட்கிறார்.
இதை கேட்டு கதிர் கோபத்தில் முறைத்துக் கொண்டு குணசேகரனிடம் சென்று என்ன அண்ணா என்ன சொன்னீங்க? அவளை அடிக்க போனீங்களா? என குணசேகரனை அதட்டி கேட்க, இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் குணசேகரன் எதுவும் பேசாமல
கல்லு போல நிற்கிறார். இவ்வாறாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications