எதிர்நீச்சல்: வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்யும் வளவன்.. ஜனனி சொன்ன வார்த்தை.. தவிக்கும் ரேணுகா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் குணசேகரன் வீட்டிற்கு கிள்ளிவளவன் வந்து பிரச்சனை செய்ய அது யார் என்று விசாலாட்சிக்கு சந்தேகம் வருகிறது.

அதே நேரத்தில் குழப்பத்தில் இருந்த நந்தினி ரேணுகா ஈஸ்வரி இடம் ஜனனி புது பிளான் போடுகிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா ஜீவானந்தத்தோடு சேர்ந்துவிட்டதால் இனி அப்பத்தான் என்ன மாதிரி முடிவு எடுக்கப் போகிறார் என்று குழப்பத்தில் இருக்கும் குணசேகரன் தன் வீட்டு மருமகள்களிடம் நீங்கதான் எப்படியாவது போய் அப்பத்தாவிடம் பேசி சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இதுபோல பிளான் போட்டு இருந்தார். அது சொதப்பி விட இப்போது அப்பத்தாவிடம் சென்டிமென்ட்டாக பேசி வீட்டு பெண்கள் சொத்தை வாங்கி விடுவார்கள் என்று நம்பி அனுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பெண்கள் எல்லோரும் ஜீவானந்தத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது ஜீவானந்தத்தை எப்படி சந்திக்கலாம்? ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் ஜீவானந்தத்தை பார்க்கும் போது அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானும் இருந்த பதட்டத்தில் அவரிடம் பேசாமல் விட்டு விட்டேன் என்று ஜனனி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கிள்ளிவளவன் குணசேகரன் வீட்டிற்கே வந்திருக்கிறார். வீட்டில் மருமகள்கள் இல்லாத நேரத்தில் குணசேகரா என்று கூப்பிட்டபடியே கிள்ளிவளவன் வீட்டிற்குள் வர கதிரும் குணசேகரனும் அவரை வீட்டிற்கு வெளியே வைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர் கத்தி பேசுவதை பார்த்து யாருப்பா அது என்று விசாலாட்சி கேள்வி கேட்கிறார்.

அதே நேரத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் வீட்டு மருமகள்களிடம் ஜனனி நீங்க யாருமே ஜீவானந்தத்தின் மீதும் அவருடைய மகள் மீதும் அனுதாபத்தை காட்ட வேண்டாம். நம்ம அப்படி செய்யும் போது அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கிள்ளிவளவன் கத்துவதை பார்த்து விசாலாட்சிக்கு உண்மை தெரிய வருமா? அப்படி தெரிய வரும்போது அவர் என்ன மாதிரி முடிவு எடுப்பார் என்பது பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அதே நேரத்தில் இனி மொத்த பெண்களும் ஜீவானந்தம் அணியில் இணையும் போது குணசேகரனுக்கு இனி என்ன மாதிரி பிரச்சனை வரும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications