ஆதிரையை அவமானப்படுத்திய அருண்.. குணசேகரன் நடிப்பை அம்பலப்படுத்திய வளவன்..செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 4ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கரிகாலனோடு வாழ்வதா அல்லது அவரை வேண்டாம் என்று சொல்வதா என்ற கேள்விக்கு ஆதிரை அருண் வீட்டிற்கு போய் இருக்கிறார்.

அங்கு ஆதிரைக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அருண் பதில் கொடுக்க அதே நேரத்தில் குணசேகரனின் நடிப்பும் அம்பலமாகி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் கரிகாலனுக்கு ஆதிரையை குணசேகரன் திருமணம் செய்து வைப்பதற்கு, எதற்காக இவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்ற ரகசியத்தை நேற்றைய எபிசோடில் ஜான்சிராணி போட்டு உடைத்து இருக்கிறார்.
ஆதிரையை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக கல்யாண மண்டபத்தை கதிர் பெயரில் கரிகாலனின் அப்பா கையெழுத்து போட்டு கொடுத்ததாக ஜான்சி ராணி மொத்த உண்மையையும் உடைத்திருக்கிறார். அதுபோல இனி கரிகாலனோடு ஆதிரையால் வாழ முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆதிரை இன்று மாலைக்குள் என்னுடைய பதிலை நான் சொல்கிறேன் என்று சொல்ல அதுவரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று வீட்டுக்குள்ளேயே ஜான்சி ராணி கம்பீரமாக இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜனனி மற்றும் சக்தியை காணவில்லை என்று வீட்டில் இருக்கும் நந்தினியும் ரேணுகாவும் தேடி பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனியும் சக்தியும் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு இடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அருணை சந்திக்க எஸ்கேஆர் வீட்டுக்கு ஆதிரை வந்திருக்கும் நிலையில் அருண் முகத்தில் அடிபட்டு இருக்கிறது.அதோடு கால் நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து வருகிறார். அப்போது எஸ்கேஆர் தம்பி அரசுவிடம் ஆதிரை "ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சி கொண்டு இருக்க, சாருலதா யோசித்தபடி நிற்கிறார். அதற்கு அரசு, "இவா வந்து இருக்கான்னு தெரிஞ்சா, அண்ணன் என்ன சொல்லுவாருன்னு தெரியுமா..?" என்று கேட்கிறார்.
அதற்கு ஆதிரை அழுது கொண்டே இருக்க அருண், "ஆதிரை என்கிற பொண்ணு இனி என் வாழ்க்கையில் இல்ல, கிளம்ப சொல்லுங்க.." என்று அந்த இடத்தை விட்டு போக, ஆதிரை அழுது கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து வளவனிடம் பேசிக் கொண்டிருக்கும் குணசேகரன் எதார்த்தமாக கையை மேலே தூக்கி விடுகிறார்.

அதற்கு வளவன்," என்னப்பா குணசேகரா கையை மேலலாம் தூக்குற?" என்று கேட்க, அது அப்படித்தான் அப்பப்ப மேல வரும் சார் என்று சொல்லிவிட்டு கையில் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, எல்லாம் நடிப்பு சார். எல்லாம் ஒரு காரணம் இருக்கு என்று சொல்ல கதிர் அதிர்ச்சியடைகிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கும் நிலையில் இன்று பல டுவிஸ்டுகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications