எதிர்நீச்சலில் பரபரப்பு.. ஜீவானந்தத்தை மீட் பண்ண போகும் ஜனனி.. வழக்கறிஞர் சொன்ன முக்கிய விஷயம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலின் சீரியலில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே குணசேகரனை பார்ப்பதற்காக ஆடிட்டருடன் வழக்கறிஞர் வந்திருக்கும் நிலையில் இன்று குணசேகரன் அவரோடு விவாதம் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜனனியும் ஜீவானந்தம் விஷயத்தில் தான் முடித்திருக்கும் முக்கிய முடிவு குறித்து ரேணுகா மற்றும் நந்தினி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பரபரப்பு பஞ்சமில்லாமல் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆடிட்டருடன் வந்த வழக்கறிஞரிடம் குணசேகரன், கதிர், ஞானம், கரிகாலனோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வழக்கறிஞர் "அவன் பண்ணுன ரிஜிஸ்ட்ரேஷன் தப்புன்னு ப்ரூவ் பண்ணனும் சார்" என்று சொல்ல, சார் எப்படி பண்ணனும் என்று சொல்ல மாட்றீங்களே? என்று குணசேகரன் கோபமாக கேள்வி கேட்கிறார்.

அதற்கு கரிகாலன் தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா? கதிரும் ஞானமும் கரிகாலனை முறைக்கின்றனர். கிச்சனில் ஜனனி ரேணுகா நந்தினி மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி," குணசேகரன் ஜீவானந்தத்தை மீட் பண்ணாம எதுவும் நடக்காது. சக்தி டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்ததும் நானே அந்த ஜீவானந்தத்தை பார்க்க போகிறேன் என்று ஜனனி கூறுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று எபிசோடில் ஜனனி ரேணுகாவிற்கு புதியதாக டான்ஸ் டீச்சராக வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஸ்கூலில் வேலை கிடைத்திருக்கும் நிலையில் இப்போது ஆன்லைன் கிளாஸ் எடுப்பதற்காக வழிவகை செய்து கொடுத்திருக்கிறார். இதனால், ரேணுகாவின் திறமை வெளிப்படும். அதே நேரத்தில் இதை தெரிந்த பிறகு குணசேகரன் என்ன மாதிரி பிரச்சனை பண்ண போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அதே நேரத்தில் தன்னுடைய கிராமத்திற்கு சென்ற ஈஸ்வரி ஜீவானந்தம் மற்றும் பர்ஹானாவை சந்தித்தது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கும் நிலையில், ஒருவேளை ஈஸ்வரியின் அப்பா தன்னுடைய இடத்திற்கு முள்வேலி போட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போயிருக்கும் நிலையில் அங்கேயும் ஜீவானந்தம் பிரச்சனை செய்ய வருகிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எபிசோடுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications