எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு எதிராகும் தர்ஷினி.. பொங்கி எழுந்த ஈஸ்வரி.. அசத்தும் ஆதிரை.. செம அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன் ஆதிரையை பழிவாங்குவதற்காக எடுத்த முடிவை பார்த்து தர்ஷினி அதிர்ச்சி ஆகிறார்.

அதே நேரத்தில் ஆதிரை குணசேகரனுக்கு எதிராக கோர்ட்டுக்கு போக இருக்கும் நிலையில் ஈஸ்வரியும் கடும் கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

 Ethirneechal Serial 2023 December 20th promo Darshini against Gunasekaran

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த அதிரடியான கதைக்களம் இப்போது தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஆதிரைக்கு அருணுடைய இந்த நிலைமைக்கு காரணம் குணசேகரன் தான் என்ற உண்மை தெரிய வந்ததும் ஆதிரை அருண் வீட்டிற்கு போய் இருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் அங்கு வந்த நீதிபதி ஆதிரை இடம் உனக்கு நடந்த அநியாயத்திற்காக நீ கோர்ட்டுக்கு போ.

உங்க அண்ணனுக்கு எதிராக நீ வழக்குப்பதிந்து கேஸ் கொடு. உனக்கு ஆதரவாக சாருபாலா இருப்பாங்க என்று சொல்ல, அதைக் கேட்டு குணசேகரன் மற்றும் ஞானம் அவமானப்பட்டு எஸ் கே ஆர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அதோடு கரிகாலன் தான் ஆதிரையை ரொம்பவே காதலிக்கிறேன் என்று சொல்ல அதற்கு நீதிபதி அவமானப்படுத்தி அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த குணசேகரனிடம் ஜான்சிராணி மற்றும் கரிகாலன் இருவரும் நாங்கள் தற்கொலை முயற்சி செய்யப் போகிறோம் உங்களால் எங்களுக்கு அவமானம் வந்துவிட்டது என்று நாடகம் போட அதற்கு குணசேகரன் நான் உனக்கு நடந்த அவல நிலைக்கு ஆறுதல் கொடுக்கிறேன் என்று சொல்லி ஆதிரையால் உன்னுடைய வாழ்க்கை சீரழிந்து விட்டது.

 Ethirneechal Serial 2023 December 20th promo Darshini against Gunasekaran

அதற்காக என்னுடைய மகள் தர்ஷினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியாக ப்ரோமோவில் குணசேகரனிடம் ஈஸ்வரி நீங்க வீம்புக்கு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல அதற்கு ஆமாடி நான் வீம்புக்கு தான் பண்ணுவேன் என்னடி பண்ண முடியும் உங்களால என்று கேட்கிறார்.

 Ethirneechal Serial 2023 December 20th promo Darshini against Gunasekaran

அதைத் தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி, தர்ஷினி, ஜனனி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஜனனி அவர் நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் செய்ய முடியாதுமா என்று சொல்ல அதற்கு தர்ஷினி செய்ய முடியாதுன்னு நாம தான் இப்படி தனியா பேசிகிட்டு இருக்கோம் அவர்தான் ஜெயிக்கிறார்
என்று கேட்கிறார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் குணசேகரன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது குணசேகரன் ஈஸ்வரியிடம் நாங்க அந்த எஸ் கே ஆரை பார்க்க கிளம்பினதும் நீங்க என் மூக்கை உடைக்க பின்னாடியே ஆதிரையை பெட்டியோடு அனுப்பி வச்சது நீங்கதான என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்து தர்ஷினி கோபத்தில் நிற்கிறார்.

அதே நேரத்தில் இனிசேகரனுக்கு எதிராக ஆதிரை கோர்ட்டில் கேஸ் கொடுக்க இருக்கும் நிலையில் தர்ஷினியும் தன்னுடைய எதிர்ப்பை காட்ட குணசேகரன் என்ன முடிவெடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் அது போல குணசேகரனுக்கு ஏற்கனவே நடந்ததெல்லாம் மறந்து போய்விட்டதா என்று தெரியவில்லை. ஏற்கனவே தர்ஷினிக்கு தான் கரிகாலனை பேசி முடித்து இருந்தார்.

ஆனால் தர்ஷினியின் ஃபங்ஷனில் போலீஸ் வந்து தர்ஷினிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்று கரிகாலனோடு திருமணத்தை தடுத்து நிறுத்தியதால்தான் ஆதிரை அந்த நேரத்தில் காதலிக்கும் விஷயம் தெரிந்ததும் குணசேகரன் கரிகாலனுக்கு ஆதிரையே பேசி முடித்த இந்த நிலையில் மீண்டும் முதலில் இருந்து குணசேகரன் தொடங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+