எதிர்நீச்சல்: தேர்தலில் ஈஸ்வரி வைத்த டுவிஸ்ட்.. போலீஸ் ஸ்டேஷன் போன குணசேகரனுக்கு செம அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 6ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் ஈஸ்வரியை தேர்தலில் வாபஸ் வாங்குவதற்காக சொல்லியிருந்த நிலையில் ஈஸ்வரி முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
இதுவரைக்கும் குணசேகரனே எல்லா விஷயங்களிலும் ஜெயித்திருந்த நிலையில் இப்போது தேர்தல் விஷயத்தில் ஈஸ்வரி சுயமாக முடிவெடுத்து இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் குணசேகரன் தேர்தலில் தான் போட்டிபோட இருந்தபோது அவரை எதிர்த்து எஸ் கே ஆர் மனைவி சாருபாலா தேர்தலில் போட்டியிட்டதும் குணசேகரன் தன்னுடைய மனைவி ஈஸ்வரியை தன் சார்பாக தேர்தலில் நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
அப்போது ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் இருந்த ஈஸ்வரி பிறகு ஜனனியின் வற்புறுத்தலினால் அதற்கு சம்மதமும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஈஸ்வரி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சாருபாலா தானாக முன்வந்து எலக்ஷனில் இருந்து நாமினேஷனை வாபஸ் வாங்கி இருக்கிறார் இந்த நிலையில் இந்த தகவல் தெரிந்ததும் குணசேகரன் ஈஸ்வரியை வாபஸ் வாங்க வைத்துவிட்டு தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் குணசேகரனுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீண்டும் என்கொயரிக்கு கூப்பிட்டு இருக்க அதனால் நந்தினி மற்றும் ஈஸ்வரியை மட்டும் எலக்சன் ஆபீசுக்கு போக சொல்லிவிட்டு குணசேகரனின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்தனர். அதே நேரத்தில் வாபஸ் வாங்குவதற்காக எலெக்ஷன் ஆபீசுக்கு போயிருந்த ஈஸ்வரி மற்றும் நந்தினி முன்பு அங்கு இட்லி கடை வைத்திருந்த பெண் தான் அரசியல் பிரமுகர்களால் படும் கஷ்டங்கள் மற்றும் தன்னுடைய விடா முயற்சி பற்றி பேச அதனால் ஈஸ்வரி மனம் மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் தம்பிமார்களோடு வீட்டிற்கு வந்து கோபமாக அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்திலேயே ஈஸ்வரி வாபஸ் வாங்குவதற்கு மறுத்து வந்து விட்டதாக தகவல் குணசேகரனுக்கு வருகிறது. இதனால் கோபமான கதிர் இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன்.
இவங்களையெல்லாம் தனியா விட்டு இருக்க கூடாது நம்மளும் கூட போய் இருக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டில் கரிகாலன் ஊரே இவரை கண்டு மெரளுது. ஆனால் இந்த வீட்டில் இருக்கிற பொம்பளை ஆட்கள் தான் இவரை மதிக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்று ஏத்தி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி வீட்டிற்கு வர அப்போது குணசேகரன் விசாரிக்கிறார். அதற்கு ஈஸ்வரி இந்த எலக்சன்ல நான் வாபஸ் வாங்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொல்ல அதனால் குணசேகரன் கோபமாக ஈஸ்வரியின் அருகில் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications