குணசேகரன் கையை முறுக்கி கதிர் சொன்ன வார்த்தை.. போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி குரூப்பிற்கு அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி ஏழாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கதிர் என்று மாஸான செயலை செய்து இருக்கிறார். அதாவது ஆதிரையை அடிக்க போன குணசேகரனின் கையைப் பிடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் தர்ஷினியை காப்பாற்ற போன எதிர்நீச்சல் பெண்கள் போலீஸிடம் பிடிபட்டிருக்கின்றனர். அவர்களை ஸ்டேஷனில் அடைத்து வைக்கும் படி குணசேகரன் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று சொல்ற மாதிரி தான் இன்று ப்ரோமோ ரசிகர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் கொடுத்து இருக்கிறது. அதாவது நேற்றிலிருந்து ஆதிரை குணசேகரனின் செயல்கள் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு கேள்வி கேட்டு அவரை வாய் அடைக்க செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் ஒரு கட்டத்தில் கோபமான குணசேகரன் ஆதிரையை அடிக்க கை ஓங்கி போகிறார். அதே நேரத்தில் ஏற்கனவே ஆதிரையிடம் கதிர் இனி நான் உனக்கு எந்த பிரச்சனையும் வர விட மாட்டேன் என்று சொல்லி இருந்த நிலையில் இன்று ஆதிரையை அடிக்க போன குணசேகரனின் கையைப் பிடித்து கோபத்தில் முறைக்கிறார். இது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கும்.
இதற்காக தானே எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த நிகழ்வு நடந்து விட்டது. இதுவரைக்கும் கதிர் நடிக்கிறாரா அல்லது உண்மையில் திருந்தி விட்டாரா என்று கேள்வியோடு இருந்த ரசிகர்களுக்கு இன்று கதிர் உண்மையில் திருந்தி இருக்கிறார் என்று தான் தோணுகிறது. அதே நேரத்தில் வழக்கம் போல எதிர்நீச்சல் பெண்கள் இன்றும் தோத்து போய் வந்திருக்கின்றனர்.
எப்போதும் ஒரு விஷயத்தை தொடங்கும்போது அதற்கு முன்பாக ஆனா.. ஊனா.. வென்று அனல் பறக்க வசனங்களை பேசிவிட்டு கடைசியில் ஜெயிக்காமல் நமத்து போன பட்டாசு போல திரும்பி வருவது தான் ஜனனி குரூப்பின் வேலையாக இருக்கிறது. அதுபோல இப்போதும் இவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள் என்று தான் தோணுகிறது. அதாவது நேற்று தர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அங்கு இருந்த தர்ஷினியின் பொருள்களை பார்த்து அழுது கொண்டிருந்த பெண்கள் இன்று போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றனர்.
இதுவரைக்கும் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டிருந்த தர்ஷினி நேற்று தான் தப்பித்து ஓடிய அந்த நேரத்தில் எதிர்நீச்சல் பெண்கள் அந்த இடத்திற்கு போய் தர்ஷினியை காணவில்லை என்று அங்கு தேடித் திரிந்த போது போலீஸிடம் மாட்டினார்களா அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்களாக வந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் நேற்று ஜீவானந்தம் போலீஸிடம் தர்ஷினி தனக்கு 17 வயதில் குணசேகரன் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார் என்று அழுதபடி வந்து சொன்னதால் நான் உன்னுடைய வழியில் நீ போ என்று அட்வைஸ் செய்தேன். அதனால் அவர் எங்கே போனார் என்று எனக்கு தெரியாது என்று ஒரு கதையை சொல்லி வைத்திருந்தார். ஆனால் இன்று ப்ரோமோவில் எதிர்நீச்சல் பெண்கள் வேறு எதையோ சொல்லி போலீசிடம் மாட்டி இருக்கிறார்கள்.
அதனால் போலீஸ் குணசேகருக்கு போன் பண்ணி உங்கள் வீட்டுப் பெண்கள் நாலு பேரும் வந்துட்டாங்க என்று சொல்ல அதற்கு குணசேகரன் அந்த நாலு பேரையும் கூண்டுக்குள்ள அடைச்சு வை நான் வரேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஜீவானந்தம் நான் சொல்லி வைத்திருந்த கதையே வேறு நீங்க வந்து இங்க சொதப்பிட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் வழக்கம் போல எதிர்நீச்சல் பெண்கள் தோற்று விட்டார்களே என்று ஏமாற்றமும் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications