எதிர்நீச்சல்: கதிரின் மாற்றத்திற்கு காரணம் இதுதானா? ஜீவானந்தம் கொடுத்த டுவிஸ்ட்.. விசாலாட்சி பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இத்தனை நாட்களாக வீட்டுக்குள் வார்த்தைகளில் மட்டுமே வன்மத்தை பேசிக்கொண்டிருந்த விசாலாட்சி இன்று கொடூரமாக மாறி இருக்கிறார். கையில் அருவாவோடு வீட்டுப் பெண்களை வெட்ட துணிந்திருக்கும் விசாலாட்சியை பார்த்ததும் குணசேகரனின் இந்த கேரக்டர் இவரிடம் இருந்துதான் வந்திருக்கிறது என்று தெரிகிறது.

அதுபோல இத்தனை நாட்களாக பெண்களை மரியாதை இல்லாமல் நடத்தி பெண்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்த கதிர் இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் நந்தினிக்கு சப்போட்டாக ஆரம்பத்தில் பேசிய கதிர் இப்போது தர்ஷினிக்கு தான் ஒரு சித்தப்பா என்று நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் அதிகமான பரபரப்போடும் எதிர்பார்ப்போடும் இருந்த நிலையில் இடையில் இப்போது சில மாதங்களாகவே கதை ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது பலருடைய அதிருப்தியாக இருக்கும் இந்த நிலையில் இப்போது மீண்டும் பழையபடி எதிர்நீச்சல் விறுவிறுப்பு கூடி இருக்கிறது.

Ethirneechal Serial 2023 January 22th promo Visalakshi aruva in his hand

அதாவது இத்தனை நாட்களாக பெண்களை அடிமையாகவும், போதை பொருளாகவே பார்த்து வந்த கதிரின் மாற்றம் சீரியலுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களாக இருந்தாலும் சரி தாயாக இருந்தாலும் சரி தனக்கு தேவைப்படுவதால் தான் அவர்களிடம் பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறார். தன்னை எதிர்த்து பேசி விட்டால் உடனே அவர்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்துவதை முதல் வேலையாக வைத்திருக்கிறார்.

இதற்கு ஞானம் மற்றும் சக்தியை பலமுறை அவமானப்படுத்தி இருக்கின்றார். அந்த வகையில் இப்போது கதிரும் இடம் பிடித்திருக்கிறார். இதுவரைக்கும் கதிர் தான் தன்னுடைய வேட்டை நாய் என்று நான் என்ன சொன்னாலும் அதை ஏன் என்று கேட்காமல் செய்யக்கூடிய ஒரே ஆள் என்று பலமுறை எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்த குணசேகரனுக்கு இப்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே தனக்கு கை, காலில் அடிபட்டு முடியாமல் இருக்கும்போது நந்தினி தன்னை பார்த்துக்கொண்ட விதத்தை வைத்து தன் முன்பு நந்தினியை மரியாதை குறைவாக பேசிய குணசேகரனிடம் தைரியமாக இனி வாடி போடின்னு பேசாதீங்க அண்ணே என்று அட்வைஸ் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது தர்ஷினி வீட்டிலிருந்து காணாமல் போய் இருக்கும்போது தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.

அதோடு தர்ஷினிக்கு கரிகாலனோடு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று சொன்னபோது கூட முடியாதுனே தர்ஷினி சின்ன பொண்ணு இப்பல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் அதைவிட சூப்பரான மாஸ் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதாவது குணசேகரன், கதிரிடம் கரிகாலன் நான் சொல்ற அதே கருத்தை தானே சொல்லுறான்.

Ethirneechal Serial 2023 January 22th promo Visalakshi aruva in his hand

அவனை அடிச்சிட்டியே, அப்போ என்னை அடிச்சிடுவியா என்று மிரட்ட அதற்கு கதிர் ஒன்னு நீ மாறு இல்லனா என்ன மாற விடுயா என்ற பேசுகிறார். அதைத் தொடர்ந்து தர்ஷினி காணாமல் போனதும் குணசேகரன் வீட்டு பெண்கள் எல்லோரும் ஜீவானந்தத்திடம் உதவி கேட்டு ஜீவானந்தத்தை தேடி போயிருந்த நிலையில் அங்கு ஜீவானந்தம் இல்லை என்று பர்கானா சொல்கிறார்.

குழந்தையை கூட்டிக்கொண்டு ஜீவானந்தம் வெளியே போயிருக்கிறார். ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டுக் கொண்டிருக்க அவர்களிடம் குடும்பத்து பெண்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டில் விசாலாட்சி கையில் அருவாளோடு இனி அவளுக இந்த வீட்டுக்கு வேண்டாம். அவளுகளை என்ன பண்ண போறேன் பாரு என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 January 22th promo Visalakshi aruva in his hand

இதனால் இன்று மேலும் விறுவிறுப்பு ஏற்பட்டிருக்கிறது. கதிர் நந்தினியை குணசேகரன் அறைந்த போது கூட இப்படி கேள்வி கேட்கவில்லை. ஆனால் இப்போது கதிர் திடீரென்று மனம் மாறி கொண்டு இருப்பதை பார்க்கும்போது சந்தேகம் வருகிறது. உண்மையில் கதிர் மனம் மாறிவிட்டாரா? அல்லது கதிர் மனம் மாற்றம் சீரியல் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதால் இயக்குனர் கதிரை திருந்தவைத்து விட்டாரா? என்று தெரியவில்லை. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? தர்ஷினியை யார் கடத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அதை கமெண்ட் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+