எதிர்நீச்சல்: கௌதமிடம் ஜீவானந்தம் பற்றி விசாரிக்கும் ஜனனி.. வீட்டை விட்டு கிளம்பும் மருமகள்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா விஷயத்தில் ஜீவானந்தத்தை பற்றி கௌதமிடம் ஜனனி மற்றும் சக்தி விசாரிக்கின்றனர்.
சக்தி மற்றும் ஜனனி கேட்ட கேள்வியை கேட்டு கௌதம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இனி என்ன பதில் சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் இனி எந்த முடிவுகள் பற்றியும் குணசேகரனிடம் சொல்ல கூடாது என்று வீட்டு மருமகள் அனைவரும் முடிவெடுக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் சீரியலுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. சில நாட்களாக ஆதிரை காதல் ட்ராக் சலிப்பு தட்டி இருந்த நிலையில் தற்போது ஆதிரையின் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்கள் சீரியலின் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.

ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% ஷேர் தன்னுடைய பெயருக்கு மாறுவதற்கு கௌதம் தான் பொறுப்பு என்று அவரிடம் பொறுப்பை கொடுத்திருக்கும் நிலையில் கௌதம் தன்னுடைய உயிர் தோழிக்காக அவர் பக்கத்தில் நிற்கப் போகிறாரா? அல்லது தன்னுடைய கொள்கை பக்கம் நிற்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் கௌதம் பற்றிய சந்தேகம் இன்னும் பர்ஹானாவிற்கு இருக்கும் நிலையில் ஜீவானந்தம் சொன்ன வேலையை கௌதம் செய்து முடிப்பாரா? என்று இன்று எபிசோட்டில் தெரியவரும்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரேணுகா, நந்தினி, ஐஸ்வர்யா மூவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ரேணுகா நாம இனி எந்த விஷயத்தையும் குணசேகரனிடம் சொல்ல வேண்டாம். அவர்கிட்ட நாம இனி பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு இன்ஃபர்மேஷன் மட்டும் தான் இனி அவருக்கு சொல்லணும் என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

நம்ம விஷயத்தில் முடிவெடுப்பதற்கு அவர் யாரு? அவருக்கு அந்த உரிமையை கொடுத்தது யாரு? என்று கோபமாக வீட்டு மருமகள்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கௌதம் ஜனனி வீட்டிற்கு வருகிறார். ஜனனி மற்றும் சக்தி இருவரும் வெளியே ஒரு இடத்தில் ரோட்டில் வைத்து கௌதமை சந்திக்கின்றனர். அப்போது அப்பத்தா கண் முழிக்கும் போதெல்லாம் தன்னுடைய 40% ஷேர் விஷயத்தில் ஒருத்தரை பாக்கணும்னு தான் அதிகமா சொல்றாங்க என்று சக்தி சொல்கிறார்.
அதற்கு கௌதம் யாரு அது என்று கேட்க "ஜீவானந்தம்" என்று ஜனனி சொல்ல கௌதம் அதிர்ச்சியாகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட் காண எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கின்றது. ஏற்கனவே சனிக்கிழமை எபிசோடில் பட்டம்மாள் வீட்டு அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன் அங்கு என்ன நிலைமை நடக்கிறது என்று பார்த்து சொல்லணும் என்று ஜீவானந்தம் கௌதம்க்கு டெஸ்ட் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று இங்கே நடந்ததை ஜீவானந்தத்திடம் கௌதம் சொல்வாரா? தன்னுடைய தோழிதான் ஜனனி என்பதை கூறுவாரா? என்று அடுத்தடுத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ஐஸ்வர்யா, தான் கவர்மெண்ட் ஸ்கூலில் தான் இனி படிக்கப் போகிறேன் என்று சொன்ன நிலையில் குணசேகரன், பிள்ளை படிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் பீஸ் கட்டுன ஸ்கூல்ல தான் ஐஸ்வர்யா படிக்கணும் என்று பிரச்சனை செய்திருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் சொல்லாமல் ரேணுகா ஐஸ்வர்யாவை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு சேர்க்க போவதால் அடுத்து குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இன்றைய எபிசோட்டில் தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications