எதிர்நீச்சல்: கரிகாலன் ரகசியத்தை சொல்லி மிரட்டிய ஆதிரை.. கௌதமால் ஜனனிக்கு வரும் பிரச்சனை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை முதலிரவுக்கு சம்மதிக்காததால் குணசேகரன் ஜான்சி ராணி வீட்டில் உன்னை கொண்டு விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்.
அதனால் ஆதிரை முதலிரவுக்கு சம்மதித்த பிறகு கரிகாலனிடம் உன்னுடைய உண்மைகளை எல்லாம் வெளியில் சொல்லி விடுவேன் என்று சொல்லி அழ வைத்து விடுகிறார்.

அதே நேரத்தில் கௌதம் மீது ஜீவானந்தம் வைத்திருக்கும் நம்பிக்கை தவறு என்று பர்ஹானா சொல்ல அதற்கு ஜீவானந்தம் சில விளக்கங்களை கொடுக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் வீட்டில் இருக்கும் பொம்பளைகளை கடுமையாக திட்டுக் கொண்டிருக்க, சமையலறையில் நந்தினி, ரேணுகா, ஜனனி மற்றும் ஆதிரை பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆதிரையிடம் தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றனர்.

மேலும் ஆதிரை என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்.? அதே நேரத்தில் நீ கரிகாலனை வீட்டுக்குள் அனுமதித்து இருப்பதும், அவனை எதிர்க்காததும் ஒரு வகையில் தப்புதான் என்று ஜனனி சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு ஆதிரை அருணிடம் பேச வேண்டும். அவன் என்னை வேண்டாம் என ஒதுக்கவில்லையே..? கல்யாணம் செய்து கொள்ள வரும்போது தானே விபத்து நடந்தது. ஒரு முறை அருணிடம் பேசினால் தான் என்னால் முடிவு சொல்ல முடியும் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த குணசேகரன் இது என்ன அடுத்த மீட்டிங்கா? சடங்கு ஏற்பாடு செய்ய சொன்னா இங்க வெட்டியா பேசிட்டு இருக்கீங்களா? ஏன் நந்தினி உன்னால ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா என்று அதட்ட, அதற்கு நந்தினி என்னால முடியாது. இது ஆதிரை வாழ்க்கை அவளுக்கு விருப்பம் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது இந்த கல்யாணத்தையே அவள் ஏத்துக்கலையே என்று சொல்கிறார்.

அதற்கு குணசேகரன் இங்க பாரு ஆதிரை இனி எல்லாம் என்னால அமைதியா போக முடியாது. வெட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன் என்று மிரட்ட, அருவாமனையை எடுத்த ஆதிரை, நீ என்ன செய்தாலும் நான் இவனை ஏத்துக்க மாட்டேன். இவனை எனக்கு புடிக்கல இவன் எனக்கு வேண்டாம் என்று ஆத்திரத்தில் கத்துகிறார். அதற்கு இந்த ஜென்மத்துல அவன் தான் உன்னுடைய புருஷன். அவனோட தான் நீ குடும்பம் நடத்த வேண்டும். இவளுக பேச்சை கேட்டு ஆடுறியா? வா அந்த ஜான்சி ராணி வீட்டில் உன்னை விட்டு விடுவேன் என்று இழுத்து செல்கிறார்.
இதனால் பயந்து போன ஆதிரை நான் இதற்கு சம்மதிக்கிறேன். நீங்க ஏற்பாடு செய்யிங்க என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்ததிடம், கௌதம் ஜனனி நண்பன் என சொன்ன பிறகும் உங்களால் எப்படி அவனை நம்ப முடிகிறது என்று பர்ஹானா கேட்டு, நம்மிடமிருந்து விஷயங்களை தெரிந்து கொண்டு ஜனனியிடம் போய் சொல்ல மாட்டார் என்பதை எப்படி உறுதியாக சொல்றீங்க என்றும் கேட்கிறார்.

அதற்கு ஜீவானந்தம், கௌதம் பெரிய அளவில் எதுவும் பிரச்சனை செய்ய மாட்டான் என தோன்றுகிறது. நிச்சயம் நாளை ஜனனியை சந்தித்து பட்டம்மாள் சொத்து பற்றி கேட்டு தெரிந்து கொள்வான். நாளை உங்களுக்கு புரியும் என்று சொல்லிவிட்டு ஜீவானந்தம் கிளம்புகிறார்.
இதைத்தொடர்ந்து கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் முதலிரவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்க, ஆதிரை கரிகாலனிடம் எனக்கு இப்போதும் அருணை தான் பிடிக்கும் என்று சொல்ல, அதை கேட்டு அழுது கொண்டு கரிகாலன் குணசேகரிடம் சொல்ல போக, அதற்கு ஆதிரை இத நீ அவர்கிட்ட சொன்னா உன்ன பத்தி பல விஷயத்தை நான் அவரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்ட, கரிகாலன் எதை சொல்ல போறாளோ என்று பயந்து கொண்டிருக்கிறார். இத்துடன் எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications