குணசேகரனை குண்டுகட்டாக தூக்கி வெளியே போடும் ஜீவானந்தம்.. கௌதமை பார்த்து அதிர்ச்சியான ஜனனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டுகட்டாக தூக்கி கம்பெனியை விட்டு வெளியே போடுவது போன்றும் ஞானம் மற்றும் கதிரை அடித்து விரட்டுவது போன்றும் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ மற்றும் எபிசோடுக்கான ஆர்வம் ரசிகர்களிடம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தின் அணியில் கௌதமை பார்த்ததும் ஜனனி அதிர்ச்சியாவது போன்று புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Ethirneechal Serial Jeevanandam throws Gunasekaran and Janani is shocked to see Gautam

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இந்த சீரியல் மற்ற சீரியல்களைப் போன்று கதை இல்லாமல் விறுவிறுப்பாகவும் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேலும் விறுவிறுப்பு கூட்டும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த ஜீவானந்தம் குணசேகரின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றிய எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் குணசேகரனின் கம்பெனியில் இருந்த ஜீவானந்தம் குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிமார்களையும் ஆளை வைத்து மிரட்டுகிறார்.

அதே நேரத்தில் வீட்டில் பெண்களை மதிக்காததை பற்றியும் வீட்டில் பெண்களை கொடுமைப்படுத்திக் கொண்டு வெளியில் பெண்களுக்கு உதவி செய்வது போன்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் குணசேகரனை பற்றி ஜீவானந்தம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜனனியை பார்த்து நீ தானமா அந்த ஜனனி? என்று கேட்டதும் வித்தியாசமாக இருந்தது.

Ethirneechal Serial Jeevanandam throws Gunasekaran and Janani is shocked to see Gautam

அதே நேரத்தில் ஜீவானந்தம் குணசேகரனின் ஆள்தான் என்று ஜனனியும், இது ஜனனி மற்றும் ஜீவானந்தம் சேர்ந்து ஆடும் ஆட்டம் என்று குணசேகரன் மற்றும் அவருடைய தம்பி ஞானம், கதிர் முதலியோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் யாருக்குமே நிஜத்தில் ஜீவானந்தம் யார் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனை ஜீவானந்தத்தின் ஆள்கள் குண்டுகட்டாக தூக்கி கை கால்களை பிடித்து தூக்கியப்படி வெளியே கொண்டு வருகின்றனர். அப்போது அதை தடுக்க வரும் ஞானம் மற்றும் கதிரையும் அடித்து இழுத்துக் கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் ஜீவானந்தத்தின் அருகில் கௌதமை பார்த்ததும் சக்தியும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது இந்த போட்டோக்கள் இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+