எதிர்நீச்சல்: ஆடிட்டர் சொன்ன வார்த்தை.. நெஞ்சு வலியில் குணசேகரன்.. கட்சி மாறும் ஜனனி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி மிரட்டியது கனவிலும் வந்து மிரட்ட தூங்க முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில் ஆடிட்டர் புதிய பிரச்சனை ஒன்றை வந்து சொல்ல குணசேகரன் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி நெஞ்சு வலியில் துடிக்கிறார்.

இந்த நிலையில் ஜூலை 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்க, இந்த சீரியலுக்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது. ஜீவானந்தம் மற்றும் குணசேகரன் பிரச்சனை தொடங்கி இருக்கும் நேரத்தில் இனி ஜனனி மற்றும் குடும்ப மருமகள்கள் யாரு பக்கம் என்ற அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றது.

எதிர்நீச்சல் பார்க்கும் ரஜினிகாந்த்.. இயக்குனரிடம் இயக்குவதை நிறுத்தச் சொன்ன காரணம்..நடந்தது இதுதானா
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனுக்கு ஜீவானந்தம் துப்பாக்கியை தூக்கி தன்னை சுட்டது போன்று கனவு வர அதனால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அங்கிருந்து அனைவரையும் பாடாய்படுத்தி எடுத்து இருக்கிறார். நான் தூங்கவே மாட்டேன். தூங்கினால் ஜீவானந்தம் துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டுருவான் என்று குழந்தை போல குணசேகரன் பயத்தில் அழுது கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் ஜனனி நான் குணசேகரனுக்கு மட்டுமல்லாமல் ஜீவானந்தத்திற்கும் பெண்கள் என்றால் யார் என்று காட்டப் போகிறேன். பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் செய்யப் போகும் செயல் வேற லெவலில் இருக்கப் போகிறது. குணசேகரன் மட்டுமல்லாமல் ஜீவானந்தமும் பெண்களை இளக்காரமாக தான் பார்க்கிறார். அதனால் என்னுடைய ஆட்டம் ஆரம்பம் என்று சபதம் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் வீட்டிற்கு ஆடிட்டர் வருகிறார். அவரைப் பார்த்ததும் குணசேகரன் "என்ன சார் பிரச்சனை.. அடுத்து லிஸ்டில் என்னத்த சேர்த்து இருக்கிறான். உயிர் போகுது சார், சொல்லுங்க" என்று கேட்கிறார். அதற்கு ஆடிட்டர் ஏதோ ஒரு விஷயத்தை கூறுகிறார்.
அதைக் கேட்டதும் குணசேகரன் உடனே நெஞ்சு வலியால் துடி துடித்து விழுகிறார். குணசேகரனை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் பதறிப் போய் குணசேகரனை தூக்க முயற்சி செய்ய கதிர் ஓடி வந்து யாரும் என் பக்கத்துல வரக்கூடாது என்று கத்திக்கொண்டு பிறகு தானே குணசேகரனை தோளில் தூக்கி சுமந்து கொண்டு ஹாஸ்பிடல் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இவ்வாறாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன நடக்கப் போகிறது என அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் குணசேகரன் போடும் இந்த நாடகம் சொத்துக்காக வீட்டு பெண்களை ஏமாற்றுவது தான் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் எபிசோடில் குணசேகரன் அழுதது, அவருடைய டயலாக், கடைசியில் அந்த ஒப்பாரி பாடல் என அனைத்தும் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பதாகவும் கருத்துக்கள் குவிகிறது.












Click it and Unblock the Notifications