எதிர்நீச்சல் பார்க்கும் ரஜினிகாந்த்.. இயக்குனரிடம் இயக்குவதை நிறுத்தச் சொன்ன காரணம்..நடந்தது இதுதானா
சென்னை: இயக்குனர் திருச்செல்வம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் பேசிய வார்த்தைகள் பற்றி திருச்செல்வன் பேசி இருக்கிறார்.

அப்போது இனி சீரியல் இயக்குவதை நிறுத்தி விடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாக திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதற்கான காரணத்தைப் பற்றியும் அவரே சொல்லி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக எதிர்நீச்சல் சீரியல் குறித்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் டிஆர்பியிலும் இந்த சீரியல் முன்னணி இடத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்த சீரியலை இயக்கும் திருச்செல்வன் இந்த சீரியலுடைய அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் நான் இதற்கு முன்பு கோலங்கள் சீரியல் இயக்கி இருந்தேன். அது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதுபோல எனக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் அவருடைய தீவிரமான ரசிகர். இந்த நிலையில் கோலாக்கள் சீரியல் முடிவடைந்த சில நாட்கள் ஆகி இருந்தது. அப்போது கோலங்கள் சீரியலில் நடித்த நடராஜன் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சீரியல் குறித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது ரஜினிகாந்த் நான் கோலங்கள் சீரியல் பார்ப்பேன் வீட்டில் தொடர்ச்சியாக பார்ப்பாங்க நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த சீரியல் பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதை என்னிடம் நடராஜன் சொன்னதும் நான் சந்தோஷத்தில் திகைத்து இருந்தேன். பிறகு நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை சொன்னதை அவர் ரஜினிகாந்திடம் சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து எனக்கும் ரஜினிகாந்தை மீட் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு அறையில் நான் ரஜினிகாந்துக்காக காத்திருந்தேன். ஆரம்பத்தில் அங்கே போகும்போது கூட ரொம்ப கூட்டமா இருக்கும் நம்ம அவர்கிட்ட என்ன பேச போறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்க போன பிறகுதான் நான் மட்டும்தான் அங்கே இருக்கிறேன் என்று தெரிந்தது. பிறகு ரஜினிகாந்த் என்னிடம் கேசுவலாக பேசினார். எனக்கு அது வியப்பாக இருந்தது. அப்புறம் எப்படி ஒரே டைரக்டர் 1500க்கு மேற்பட்ட எபிசோடை எடுத்து இருக்கீங்க. உங்க சீரியல் நானும் பார்க்கிறேன் என்று ரஜினி சார் சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
மேலும் நிறைய பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது இனி நீங்கள் சீரியல் இயக்குவதை விட்டுவிடுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இருக்கும் திறமையை வைத்து திரைப்படம் டைரக்ட் பண்ணுங்க என்று சொன்னார். உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா? என்று கேட்கும்போது நான் ஏற்கனவே ஒரு கதை வைத்திருந்தேன். ஆனால் அதை அவரிடம் சொல்ல மறந்து அப்போதும் ஹீரோயினிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ஒரு கதையை சொன்னேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே நான் கதை கேட்டா நீங்க ஹீரோயினிக்கு கதையை சொல்றீங்களே என்று சொன்னார்.
அந்த நாளை மறக்க முடியாது. அப்போது ரஜினிகாந்த் என்னிடம் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் அப்படியே இருக்கிறது. அவரோடு போட்டோ எடுக்குறதை கூட நான் மறந்துவிட்டேன், அவர்தான் நினைவுபடுத்தினார். என் கையில் இருந்த ஃபோனில் அவ்வளவு கிளாரிட்டி இல்லையே என்று சொன்னபோது அவரே ஒரு கேமரா அரேஞ்ச் பண்ணி போட்டோ எடுத்து என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு போட்டோ அனுப்பி வைத்திருந்தார். இப்போதும் எதிர்நீச்சல் சீரியலை அவர் பார்ப்பதாக அவரோடு ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் மாரிமுத்துவிடம் கூறியிருக்கிறார் என்று திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications