எதிர்நீச்சல்: வீட்டிற்கே வந்த ஜீவானந்தம்..அதிர்ச்சியில் குணசேகரன்..ஜனனி செய்த எதிர்பாராத செயல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தம் வீட்டிற்கு வந்து அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதை சிசிடிவி கேமராவில் பார்த்த ஜனனி வீட்டிற்கு ஓடி வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த தருணம் நடக்க தொடங்கி இருக்கிறது. எப்போது குணசேகரனும் ஜீவானந்தமும் மீட் பண்ணுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று அது நடக்க தொடங்கி இருக்கிறது.
ஜீவானந்தம் ஏற்கனவே அப்பத்தா தனக்கு எழுதி தந்த சொத்துக்கள் போதாது என்று மீதம் இருக்கும் சொத்துக்களையும் பெற வேண்டும். அதற்காக அப்பத்தாவின் கைரேகைகளை எடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
அதே நேரத்தில் குணசேகரன் ஆடிட்டர் மூலமாக அப்பத்தாவின் கைரேகைகளை எடுப்பதற்கு பிளான் போட்ட நிலையில் அது ஜனனியால் தடைப்பட்டு போய்விட்டது. ஜனனி திடீரென்று அந்த ரூமிற்குள் வந்ததால் ஆடிட்டர் கைரேகை எடுக்காமல் வெளியேறிவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ஆடிட்டர் தன்னால் கைரேகை எடுக்க முடியவில்லை என்று குணசேகரிடம் கூறுகிறார்.

இதை கேட்டு குணசேகரன் வழக்கம்போல ஆடிட்டரை திட்டி தீர்க்க, அதற்கு ஆடிட்டர் இது ஒன்னும் என்னுடைய வேலை இல்லையே சார் என்று சொல்ல, அதே நேரத்தில் அங்கு ஓடி வரும் கதிர் குணசேகரனிடம் கைரேகை எடுத்தாச்சா என்று சந்தோசமாக கேட்கிறார். குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிட்ட நிலையில் அப்பத்தாவின் அறைக்கு வந்த ஜீவானந்தமும் அவருடைய பிஏவும் பத்திரத்தில் அப்பத்தாவின் கைரேகைகளை எடுக்கின்றனர். இதை அந்த அருகில் வைத்திருந்த சிசிடிவியின் புட்டேஜை தன்னுடைய மொபைல் போனில் பார்த்து ஜனனி வேகமாக சக்தியை கூப்பிட்டுக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
இந்த நிலையில் ஜீவானந்தம் நல்லவரா கெட்டவரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அதே நேரத்தில் மொத்த சொத்துக்களையும் ஜீவானந்தத்தின் பெயரில் பட்டம்மாள் கைநாட்டு வைத்து கொடுத்து விட்ட நிலையில், இனி ஜீவானந்திற்கும் குணசேகரனுக்கும் தான் ஆட்டம் பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications