எதிர்நீச்சலில் மாஸாக "ஜீவானந்தம்” அறிமுகம்.. அவருடைய கதை இதுதானா? இனி யாருக்கு பிரச்சனை?
சென்னை: சன் டிவியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் ஜீவானந்தம் அறிமுகமாகி இருக்கிறார்.
ஜீவானந்தமாக அனைவரும் எதிர்பார்த்தபடியே இயக்குனர் திருச்செல்வம் அறிமுகமாகி இருக்கிறார்.
இனி ஜீவானந்தத்தால் ஜனனிக்கு பிரச்சனையா? அல்லது குணசேகரனுக்கு பிரச்சனையா? என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சன் டிவில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜீவானந்தம் அறிமுகம் நிகழ்ந்து விட்டது. அனைவரும் ஆசைப்பட்ட மாதிரி இயக்குனர் திருச்செல்வமே ஜீவானந்தமாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இவர் வில்லனா? ஹீரோவா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்கும் சீரியல்களில் நடிகராக நடித்து வருவது வழக்கமானது தான். கோலங்கள் போன்ற சீரியல்களில் ஆரம்பத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தையும் பிடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அதே வரிசையில் எதிர்நீச்சல் சீரியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் பட்டம்மாள் அப்பத்தா கண்விழிக்கும் போதெல்லாம் ஜீவானந்தம் என்ற பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் அவர் நல்லவராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது அவரைப் பற்றி ஜனனி விசாரித்துக் கொண்டிருக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் கெட்டவரா என்றும் எண்ண தோன்றுகிறது. அதனால் இந்த சீரியலில் இவருடைய ஆக்டிங் என்ன என்பது புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனனி ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு பெண்ணுக்கு போன் பண்ணிய நிலையில் அந்தப் பெண் கௌதம் இடம் போன் செய்து மதுரையில் உள்ள மொத்த பணக்காரர்களின் லிஸ்டுகளையும் கேட்டிருப்பதால் இவர்கள் பணக்காரர்களின் லிஸ்ட்டை எடுத்து அவர்களை மிரட்டுவார்களா அல்லது பணக்காரர்கள் லிஸ்ட்டை எடுத்து அவர்களை பழிவாங்க போகிறார்களா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இருந்தாலும் இன்றைய எபிசோட்டில் ஜீவானந்தம் என்ன பேசப் போகிறார் என்று நேற்று ப்ரோமோ வெளியான நிலையிலிருந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஜீவானந்தம் மற்றும் குணசேகரனுக்கு எந்த மாதிரி விளையாட்டு ஆரம்பமாக போகிறது என்பதற்காகவும் ரசிகர்கள் வேய்ட்டிங்கில் இருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications