எதிர்நீச்சல்: உண்மையை உளறிய விசாலாட்சி.. மிரட்டும் ஜான்சி ராணி.. கோபத்தில் குணசேகரனின் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை ஓடிப்போன விஷயத்தை மண்டபத்தில் அனைவருக்கும் கரிகாலன் கூறுகிறார்.

அதை கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் ஈஸ்வரியை திட்டுகிறார்.

பிறகு குணசேகரன் தற்கொலை செய்யப் போவதாக அதற்கு முயற்சி செய்ய மொத்த குடும்பமும் காப்பாற்றி விடுகிறது.

Ethirneechal serial 2023 June 21th Episode Vishalakshi who told the truth full update

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆதிரை ஓடிப்போன விஷயத்தை கரிகாலனும் கதிரும் மண்டபத்தில் வந்து சொல்ல, அதை கேட்டு ஜான்சி ராணி பெரிய அளவில் பிரச்சினை செய்கிறார்.

தன்னை வீட்டுப் பெண்களே ஏமாற்றி விட்டார்கள் என்று குணசேகரன் கோபத்தில் புலம்பிக்கொண்டே இருக்க, தன்னுடைய அம்மாவிடம் பிளாக்மெயில் செய்து செண்டிமெண்டாக பேசி ஆதிரை எங்கு போனார் என்ற விஷயத்தை கேட்க முயற்சி செய்கிறார். ஆனால் விசாலாட்சி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி குணசேகரன் முகத்தைக் கூட பார்க்காமல் இருக்கிறார்.

இதனால் குணசேகரனுக்கு சந்தேகம் வந்துவிட தன்னுடைய அம்மாவிடமும் ஈஸ்வரி இடமும் மிரட்டி பார்க்க அவர்கள் எதுவுமே சொல்லாததால் ஒரு கட்டத்தில் கோபமாகி தற்கொலை முயற்சி செய்ய தூக்கு போட போகிறார். பிறகு அனைவரும் காப்பாற்றி விட, ஜான்சி ராணி நீ சாகுறது என்றால் தாராளமா சாவு, ஆனா எனக்கும் என்னுடைய பையனுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு சாவு என்று திட்டுகிறார்.

Ethirneechal serial 2023 June 21th Episode Vishalakshi who told the truth full update

இன்னும் கொஞ்ச நேரத்துல என் பையனுக்கு உன் தங்கச்சி கூட கல்யாணம் நடக்கணும்.. இல்லன்னா..! உங்க எல்லாருடைய வேட்டிய அவுத்து விடுவேன் என்று மிரட்ட, அந்த நேரத்தில் கரிகாலன் ஆதிரை போன வேகத்துல அவளுக்கு கல்யாணம் மட்டுமில்ல ஃபர்ஸ்ட் நைட் கூட நடந்திடும் போல என்று கூறி அருகில் இருந்த அனைவரையும் அடிக்கிறார்.

அதே நேரத்தில் ஆதிரையை கூட்டிக்கொண்டு ஜனனி, ரேணுகா, நந்தினி மூவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்து விட அங்கே அருண் வராததால் அதிர்ச்சி அடைகின்றனர். சக்தி எத்தனையோ முறை போன் முயற்சி செய்து விட்டேன் ஆனால் இன்னும் வரல, போனும் கிடைக்க மாட்டேங்குது என்று பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+