குணசேகரனை "அதை” சொல்லி மிரட்டும் ஆதிரை.. கதறி அழும் விசாலாட்சி.. ஜனனிக்கு விழுந்த அடி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் வலுக்கட்டாயமாக கரிகாலன் கட்டிய தாலியை ஆதிரை கழட்டி வீசி நடுரோட்டில் பிரச்சனை செய்கிறார்.
அதனால் இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று குணசேகரன் அவசரமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு குடும்பத்தோடு செல்கிறார்.
அங்கு வைத்து குணசேகரனையும் மொத்த குடும்பத்தையும் ஆதிரை மிரட்டுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பான திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் ஆதிரையை யார் கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆதிரை காதலித்து வந்த அருண் கடைசி நேரத்தில் கோவிலுக்கு வராததால் குணசேகரன் நினைத்தபடியே கரிகாலன் ஆதிரைக்கு தாலி கட்டி விட்டார்.
அதுமட்டுமல்லாமல் ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரையும் இனி வீட்டிற்குள் வரக்கூடாது என்று குணசேகரனும் கதிரும் மிரட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தாங்கள் எடுத்த முயற்சி எல்லாம் தோல்வியில் போய்விட்டது என்ற வேதனையில் மூவரும் இருக்கின்றனர். அதே நேரத்தில் அருண் எங்கே போனான் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் இருக்கிறது.
இந்த நிலையில் ஆதிரைக்கு கரிகாலனுடன் கல்யாணம் ஆனது விசாலாட்சிக்கு தெரியாமல் இருந்தது. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்குள் குணசேகரன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு வந்ததும் அத்தைக்கு தெரியும். அதுக்கு பிறகு தெரியட்டும் நீங்களாக எதையும் சொல்லாதீங்க என்று ரேணுகா ஈஸ்வரியிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரிஜிஸ்டர் ஆபீஸில் மொத்த குடும்பத்தோடு குணசேகரன் காத்திருக்க அப்போது ஆதிரை உள்ளே ரெஜிஸ்டர் கிட்ட எனக்கு மட்டும் இந்த கல்யாணத்துக்கு விருப்பம் இல்ல. என்ன எல்லாரும் கட்டாயப்படுத்தி தான் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும், மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிருவாங்க என்று ஆதிரை மிரட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டிற்கு ஜனனி, ரேணுகா, நந்தினி, சக்தி அனைவரும் வந்திருக்கும் நிலையில் கோவிலில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் விசாலாட்சி இடம் கூறுகின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியான விசாலாட்சி அழுதபடியே என் புள்ள கடைசியில் ஜெய்ச்சுட்டான். நீங்க எல்லாரும் தோத்துட்டீங்க. இப்ப வருவான் வந்து என்னெல்லாம் பேச போறான்னு தெரியலையே என்று கதறி அழுது புலம்புகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications