குணசேகரனுக்கு எதிராக அம்மா செய்த செயல்.. ஜனனியால் வீட்டிற்கு வரும் நபர்.. தொடங்கியது புது ஆட்டம்

குணசேகரனை முதல் முறையாக அவருடைய அம்மா எதிர்த்து பேசுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிரைக்கு ஆதரவாக குணசேகரனின் அம்மா மாறி இருக்கிறார்.

கரிகாலனோடு ஆதிரையை திருமணம் செய்து வைக்க குணசேகரன் புது பிளான் போடுகிறார்.

குணசேகரனுக்கு எதிராக ஜனனி அடுத்த பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.

கட்சி மாறிய அம்மா

கட்சி மாறிய அம்மா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு அவருடைய அம்மா ஆதிரைக்கு ஆதரவாக மாறிவிட்டார். தன்னுடைய மகன் குணசேகரன் மற்றும் கதிர் இருவருமே ஆதிரையை மருத்துவமனையில் போய் பார்க்கவில்லையே என்று கோபத்தில் விசாலாட்சி இருக்கின்றார். அதே நேரத்தில் ஆதிரைக்கு பிடிக்காத திருமணமும் தேவை இல்லை என்றும், அதுபோல கரிகாலனின் குடும்பமும் சரியில்லை என்று விசாலாட்சி குணசேகரனுக்கு எதிராக ஜனனியின் பக்கம் திரும்பி இருக்கிறார்.

குணசேகரனின் புது ப்ளான்

குணசேகரனின் புது ப்ளான்

ஆதிரை மருத்துவமனையில் இருந்து வந்ததும் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று குணசேகரன் கரிகாலன் குடும்பத்தை வீட்டிற்கு வர வைத்து அடுத்த முகூர்த்தத்தில் மண்டபத்தை புக் பண்ணு, இனி உடனே திருமணம் நடந்தாக வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு ஜனனி அப்படியெல்லாம் உங்கள் விருப்பத்துக்கு திருமணம் செய்ய முடியாது. எல்லா விஷயத்தையும் முடிவு பண்ணுற அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று அனைவரும் முன்னிலையிலும் குணசேகரனை அவமானப்படுத்துகிறார்.

யாராக இருக்கும்

யாராக இருக்கும்

ஜனனி குணசேகரனை பற்றி பேசியதும் கதிர் எங்க தங்கச்சி வாழ்க்கையை முடிவு பண்ணுற அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது. என்று கோபமாக சொல்ல, அதற்கு கதிர் உடைய அம்மா விசாலாட்சி, அதுக்கு தான் ஆஸ்பத்திரியில் கிடக்கும் போது பேசாம இருந்தீங்களா? என்று சொல்ல, குணசேகரன் தலையை குனிந்து விடுகிறார். அப்போது ஜனனிக்கு போன் அடிக்கிறது, எடுத்து பேசிய ஜனனி வந்துட்டீங்களா? இதோ வருகிறேன் என்று வெளியே வருகிறார்.யாரை கூப்பிட போகிறார் என்று குணசேகரன் கேட்க? கதிர் ஜனனியின் பின்னாடியே ஓடி வந்து வாசலில் நிற்கிறார்.

வீட்டிற்கு வரும் நபர்கள்

வீட்டிற்கு வரும் நபர்கள்

ஜனனி கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்து காரில் வருபவர்களை வரவேற்கிறார். காரில் வருபவர்களை பார்த்து கதிர் அதிர்ச்சியாகிறார். இதைத்தொடர்ந்து இன்றைய எபிசொட்டில் ஆதிரை காதலிக்கும் அருண் குடும்பத்தினர் வீட்டில் முறைப்படி சம்பந்தம் பேச வர இருக்கிறார்கள். வழக்கம்போல அவர்களை குணசேகரன் அவமானம் செய்தாலும், இனி ஆதிரைதான் எங்களுடைய மருமகள் என்று அவர்கள் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் வருகிற 3-ஆம் தேதி திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நாள் குறித்து இருக்கும் அதே நாளில் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் என்று சொல்ல இருக்கிறார்கள் என்ற தகவல்கள் கசிந்து இருக்கிறது. இன்று இரவு புது பிரச்சனை வேடிக்க இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+