குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..அப்பத்தாவிற்காக ஜனனி செய்த செயல்..வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: குணசேகரனுக்கு தெரியாமல் அப்பத்தா ரூமுக்குள் நுழைந்த ஜனனி அங்கே சிசிடிவி கேமரா வைத்து அனைத்தையும் கண்காணிக்கிறார்.
ஆதிரை கல்யாண விஷயத்தில் அனைவரையும் திசை திருப்பி இருக்கும் குணசேகரனுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைக்கிறது.
அருணை சக்தியும் ஜனனியும் தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று அரசு குணசேகரினிடம் போட்டுக் கொடுக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பலரும் எதிர்பார்த்த அந்த தருணம் நிகழத் தொடங்கி இருக்கிறது. இதில் மே 29ஆம் தேதிக்கான எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி இன்று நடக்கப்போகும் ட்விஸ்ட் பற்றி பேசி இருக்கிறார்.
இதுவரைக்கும் ஜான்சி ராணி குடும்பம் தான் வினையா இருக்கிறாங்க என்று நினைத்தது தப்பா போச்சு. அதுபோல அருண் இங்கேதான் இருக்கிறான் என்று கரிகாலன் தன்னுடைய நண்பன் போனில் போட்டோவை பார்த்து சீன் போட்டு கடைசியில் கை உடைந்தது தான் மிச்சம்.
அதுபோல எல்லாரையும் மாதிரி கல்யாண விஷயத்தை கன்வெர்ட் பண்ணியாச்சு. இனி யாரும் அப்பத்தாவை பார்க்க மாட்டாங்க என்று குணசேகரன் நெனச்சி இருக்கலாம் ஆனா என்னோட திட்டம் என்னன்னு அவருக்குத் தெரியாது இல்ல என்று அந்த ப்ரோமோவில் ஜனனி பேசியிருக்கிறார்.

அப்பத்தாவின் ரூமில் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமராவை ஜனனி ஒளித்து வைத்திருக்கும் நிலையில் அந்த ரூம்பிற்கு குணசேகரன் வரும்போது ஜனனி எப்போதும் போல ஒன்றும் தெரியாதது போல முறைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜனனி செய்து வைத்திருக்கும் சூழ்ச்சி குணசேகரனுக்கு தெரிய வந்து விட்டதா? இல்லையா? என்பது இன்றைய எபிசோட்டில் தான் தெரியும்.
இந்த நிலையில் இந்த சீரியலில் ஜனனி அமைதியாகவே இருந்து காரியத்தை சாதிப்பது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கதிர் சும்மா சும்மா ஜனனி கையை பிடிக்கிறான். ஜனனிடம் மிகவும் நெருக்கமாக வரான். இதையெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. தம்பி மனைவியிடம் பேசுவதற்கும், சண்டையிடுவதற்கும் இவ்வளவு நெருக்கமாக வர வேண்டுமா? இது முகம் சுளிக்கிற மாதிரி இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இனி கண் முழிக்கும் போது ஜீவானந்தன் யார் என்பது பற்றி அப்பத்தா பேசினால் அது கேமராவில் பதிவாகி அதை அடையாளமாக வைத்து ஜனனி கண்டுபிடித்து விடுவார் என்று இவர்கள் ஆர்வத்தோடு இருக்கும்போது, சனிக்கிழமை எபிசொட்டில் கதிரை பார்த்து சக்தி கேட்ட கேள்வி எல்லாம் சூப்பராக இருந்தது. ஆனால் ஜனனி கையை பிடித்ததற்கு ஒரு அடி விட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications