சொத்து விஷயத்தில் ஜனனிக்கு கிடைத்த க்ளூ..ரகசியம் உடைபடும் தருணம்..பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் எல்லோரையும் வெளியே அனுப்பி வைத்துவிட்டு குணசேகரன் புது பிளான் போடுகிறார்.
அப்பத்தாவிடம் ரகசியமாக கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்று குணசேகரன் செய்யும் பிளான் ஜனனிக்கு தெரிய இருக்கிறது.
சொத்து விஷயத்தில் தனக்கு ஒரு லீட் கிடைத்திருக்கிறது என ஜனனி சக்தியிடம் கூறுகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த தருணம் நிகழ தொடங்கி இருக்கிறது. எப்போது ஜீவானந்தன் வருவார் யார் அந்த ஜீவனந்தன் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இனி அதைப் பற்றி ஜனனி தேடி கண்டுபிடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் மே 29ஆம் தேதி எபிசோட்டுக்காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரை கல்யாணத்துக்கு நாங்க எல்லாரும் கிளம்பி மண்டபத்துக்கு போயிருவோம் நீங்க சீக்கிரமா வாங்க, வந்து கமுக்கமா வேலையை முடிங்க என்று குணசேகரன் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்று குணசேகரன் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அது தடைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இப்போது அனைவரும் வீட்டில் இல்லாத போது அதை சாதித்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட, ஏற்கனவே அந்த அறையில் ஜனனி கேமரா செட் பண்ணி வைத்திருக்கிறார். அது குணசேகரனுக்கு தெரியாது. இனி அவர் கையும் களவுமாக மாட்டப் போகிறார்.

அதுமட்டுமல்லாமல் சக்தியிடம் அப்பத்தா ரூம்ல சிசிடிவி ஃபிக்ஸ் பண்ணிட்டேன். சொத்து விஷயத்தில் முக்கியமான ஒரு லீட் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அப்பத்தா கண் முழிக்கும்போது ஜீவானந்தம் என்று சொன்னதை பற்றி தான் ஜனனி சக்தி இடம் பேசப்போகிறாரா? அல்லது அப்பத்தாவிடம் ஜனனி உங்க போனை எங்கே வைத்தீங்க என்று கேட்டதற்கு கொடுத்த க்ளூ பற்றி சொல்கிறாரா? என்று இன்றைய எபிசோடில் தெரியும்.
இந்த நிலையில் இந்த ப்ரோமோக்கான கமெண்டில் ரசிகர்கள் சக்தி கதிரிடம் பதிலுக்கு பதில் பேசியது சூப்பராக இருந்தது. ஆனால் அதுவெல்லாம் போகாது கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டு இருக்கணும், இன்னும் நல்லா இருந்திருக்கும் என்றும் சட்டுபுட்டுன்னு ஆதிரை கல்யாணத்தை முடிச்சிட்டு அடுத்த கட்டத்துக்கு போங்க அப்பதான் கதை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் சீக்கிரமாக ஜீவானந்தம் வர வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications