போலீஸோடு உடன் வந்த ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி..குணசேகரன் சொன்ன பதில்.. பரபரப்பான தருணம்
சென்னை: அப்பத்தாவை பார்க்க விட வேண்டும் என்று ஜனனி போலீஸ் மற்றும் வழக்கறிஞர், விஏஓ என பலரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
அனைவரையும் ஏமாற்றும் பொருட்டு குணசேகரன் தைரியமாக பதில் கூறுகிறார்.
குணசேகரனுக்கு எதிராக பேச சொல்லி ஜனனி விசாலாட்சியிடம் கூறுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே மூன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வழக்கறிஞர், விஏஓ என பலரையும் கூட்டிக்கொண்டு குணசேகரன் வீட்டிற்கு வந்து குணசேகரன் இடம் கேள்வி கேட்கிறார்.
இதுவரைக்கும் நீங்க உங்க பையன எதிர்த்து எதுவும் பேச மாட்டீங்க, ஆனா இப்பவும் பேசாம அப்படியே இருக்கிங்க என்று ஜனனி விசாலாட்சியை திட்டுகிறார். அதற்கு குணசேகரன் நான் எங்க அப்பாத்தாவை ரொம்ப நல்லாவே பார்த்து இருக்கேன். நீங்க இந்த பொண்ணு சொல்றதை நம்பாதீங்க என்று கூறுகிறார். இதை கேட்டு கதிர் நக்கலாக சிரித்தபடி நிற்கிறார்.
ஜனனி மீது பழி சுமத்தும் குணசேகரனுக்கு எதிராக சக்தி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் கதிர் ஜனனியிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் கோபப்பட வைத்திருக்கிறது. ஒரு பக்கம் காட்டுமிராண்டித்தனமாக கதிர் பெண்களிடம் நடந்து கொள்கிறார் என்று அவரை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரைக்கும் அண்ணனின் பேச்சை கேட்டு சக்தி ஆடிவந்த நிலையில் இப்போது சுயமாக தன்னுடைய மனைவியின் பக்கத்தில் உறுதுணையாக நிற்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல சக்தி எப்போதும் இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனி கதிரை அந்த போலீஸ் நாலு அடி அடிக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அப்பத்தாவை பார்க்க விடாமல் குணசேகரன் பிரச்சனை செய்து கொண்டிருக்க, அதற்கு எதிராக ஜனனி புது பிளான் போட்டிருக்கும் நிலையில் இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் அதிகரித்து இருக்கிறதாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications