எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு மாமா வைத்த ஆப்பு.. உண்மையை நிரூபிக்க சக்தி மற்றும் ஜனனி எடுத்த ஆயுதம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 20 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தாவின் மரணம் குறித்து குணசேகரனின் தாய் மாமன் பகீர் தகவல் சொல்லி இருக்கிறார்.

அப்பத்தாவின் போட்டோவிற்கு மாலை போட சொல்லி குணசேகரன் சொல்ல அதற்கு ஜனனி மற்றும் சக்தி இருவரும் பிரச்சனை செய்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இந்த வகையில் யாரும் எதிர் பார்க்காத திருப்பங்கள் எதிர்நீச்சல் சீரியலில் வந்து கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை கொலை செய்வதற்காக குணசேகரன் சில மாதங்களாகவே பிளான் போட்டு இருந்த நிலையில் இப்போது அப்பத்தா இருந்த கார் வெடித்து சிதறி இருக்கிறது. அதனால் அப்பத்தாவும் இறந்து போய்விட்டார் என்று கூறியிருக்கின்றனர்.

அதே நேரத்தில் அப்பத்தா உடல் பாகங்களை கொண்டு போய் ராமேஸ்வரத்தில் குணசேகரன் கரைக்க போய் இருப்பதாகவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுபோல அப்பத்தா இறந்து போன செய்தியை ஊரெங்கும் அனைவரும் கூறியிருக்கும் நிலையில் சில உறவினர்களும் விசாலாட்சியின் தம்பி முதலானவர்கள் வந்திருக்கின்றனர்.
அப்போது வீட்டிற்கு வந்து குணசேகரனின் மாமா விசாலாட்சி மற்றும் உறவினர்களிடம் இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல. மனுஷன் போட்ட கணக்கு மாதிரி தான் தெரியுது என்று கூறுகிறார். அதைக் கேட்டு ஞானம் அதிர்ச்சியாகிறார். அடுத்ததாக அங்கு வரும் குணசேகரனிடம் விசாலாட்சி, கூட பிறந்தவன்னு கூட நினைக்காமல் பழியை தூக்கி போடுறான் என்று சொல்ல அதற்கு சக்தி அம்மா நான் பேசுறது எல்லாமே உண்மையாகவே நிஜம் என்று சொல்லுகிறார்.

இதையெல்லாம் கேட்டு கோபமாக இருக்கும் குணசேகரன் எப்பா ஞானம் போட்டோவுக்கு மாலைய போடு என்று சொல்கிறார். அதை கேட்டதும் கோபமான ஜனனி இது எல்லாம் நடத்தக்கூடாது. அதையும் மீறி இதையெல்லாம் பண்ணுனீங்கன்னா நான் வேற மாதிரி ஆக்சன் எடுப்பேன் என்று சொல்கிறார். இந்த நிலையில் குணசேகரன் பிளான் போட்டபடி அப்பத்தாவை கொலை செய்து விட்டாரா? அல்லது அப்பத்தாவை ஜீவாவிடம் இருந்து காப்பாத்தி மறைத்து வைத்திருக்கிறாரா என்று கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

ஒருவேளை ஜீவானந்தம் அப்பத்தாவை மறைத்து வைத்திருந்தால் வீட்டு பெண்கள் அனைவரும் இனி சுயமாக முன்னேறிய பிறகு வரும் அப்பத்தாவின் என்ட்ரியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஒருவேளை குணசேகரனே அப்பத்தாவை கடத்தி வைத்து விட்டு வீட்டுப் பெண்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்வதற்காக பிளான் போட்டு இருக்கிறாரா என்ற சந்தேகமும் அனைவருக்கும் இருக்கிறது.
ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இப்போது ஒரு சில எபிசோடுகளாகவே சக்தி கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. இது போலவே சக்திக்கு இன்னமும் அதிகமான கேரக்டர் கொடுக்க வேண்டும் என்று அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஜனனிக்கு அதிகமான டயலாக் கொடுக்கப்படவில்லை என்பதும் பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதுபோல இன்றைய ப்ரோமோவில் ஜனனி தைரியமாக பேசியிருக்கும் நிலையில் எபிசொட்டில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications