எதிர்நீச்சல்: ஈஸ்வரியால் மாட்டப் போகும் ஜீவானந்தம்.. அப்பத்தா எடுத்த முடிவால் ஆடிப் போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 14ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன் ஜெயிலுக்கு போனதும், ஜீவானந்தத்தை போய் ஈஸ்வரி சந்திக்கிறார்.

Ethirneechal Serial 2023 October 14th promo and fans reaction

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கதிர் பிளான் போட அதை ஈஸ்வரி கேட்டு விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் குணசேகரனை மையமாக கொண்டு கதை நகர்ந்து வந்த நிலையில் இப்போது குணசேகரன் ஜெயிலில் ஏழு நாட்கள் இருப்பது போன்று கதை கொண்டு போய் இருக்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டு பெண்கள் தங்களுடைய வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 October 14th promo and fans reaction

ஏற்கனவே குணசேகரன் காணாமல் போய் இருந்த நேரத்தில் வீட்டு மருமகள்கள் தங்களுடைய பிசினஸ்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருந்தனர். ஆனால் குணசேகரன் வந்ததுமே அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார். அதைத் தொடர்ந்து தான் இல்லாவிட்டாலும் தன்னுடைய வீட்டு பெண்களை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய தம்பிமார்களுக்கு குணசேகரன் கட்டளை போட்டு இருக்கிறார்.

அதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்ட ஞானம் மற்றும் கதிர் அதை செயல்படுத்த வேண்டும் என்று வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஜனனி தன்னுடைய கம்பெனியை சீக்கிரமாக திறக்கப் போகிறேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் எபிசோடில் வீட்டை விட்டு வெளியே போயிருந்த அப்பத்தா மீண்டும் வீட்டிற்கு வந்து வீட்டு மருமகள்களை திட்டிக் கொண்டிருந்தார்.

Ethirneechal Serial 2023 October 14th promo and fans reaction

நீங்கள் இப்படி வீட்டிற்குள் முடங்கி கிடந்தால் கிடக்க வேண்டியது தான். உங்களுக்கு கிட்சன் அதிகாரம் போய்விட்டதே என்று அழுது கொண்டிருக்கிறீர்களே அறிவு இருக்கா? என்று திட்டிக்கொண்டு, நீங்கள் இப்படியே இருந்தால் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

அதோடு இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரி, ஜீவானந்தம் வீட்டிற்கு போய் இருக்க, அப்போது வெண்பா அப்பா ஈஸ்வரி அம்மா வந்திருக்காங்க என்று சொல்ல, ஜீவானந்தம் வெளியே வந்து என்ன இங்க வந்து இருக்கீங்க? என்று கேட்கிறார். அதற்கு இல்லை பேசணும்னு தோணுச்சு என்று ஈஸ்வரி சொல்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் கதிரும் ஞானமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 October 14th promo and fans reaction

அப்போது ஞானம் அந்த ஜீவானந்தம் தானா வந்து வலையில் சிக்கி இருக்கான். அவனை அப்படியே முடிச்சு விட்டுரனும் என்று சொல்ல, அதை மாடியில் இருந்து ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து அப்பத்தா நான் ஒரு பங்க்சனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறேன். நீங்க எல்லாரும் கலந்துக்கணும்.

அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க போறது யாருன்னு தெரியுமா? ஜனனி என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு மாடிக்கு கதிர், ஞானம், விசாலாட்சி, கரிகாலன் என எல்லோரும் வருகின்றனர். அப்போது பட்டம்மாள் பேசியதை கேட்டு கதிர் கைதட்டி கொண்டே வருகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று சரியான பஞ்சாயத்து காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+