எதிர்நீச்சல்: அடி வாங்கிய கதிர் பற்றி ஜனனி சொன்ன வார்த்தை.. கதிகலங்கிய ஈஸ்வரி.. சக்தி செம ரியாக்ஷன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரி இடம் அடி வாங்கிய கதிர் அடுத்து என்ன பேச என்று அவமானத்தில் இருக்கும் நிலையில் ஜனனி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் பற்றி ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு விசாலாட்சி அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் திமிராக ஆட்டம் போட்டு கொண்டு இருந்த கதிர் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி கையால் அடி வாங்கி இருக்கிறார். இதுவரைக்கும் அண்ணி, அம்மா என்று யாருக்கும் மரியாதை இல்லாமல் திமிராக பேசிக் கொண்டிருந்த கதிர் நேற்றைய எபிசோட்டில் வழக்கம் போல ஈஸ்வரியையும் அவருடைய குழந்தைகளையும் தீட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது ஈஸ்வரி இடம் நீ எங்க அண்ணன் போனதும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு அழகிறியா என்று கேட்க அதற்கு ஈஸ்வரி படார் என்று கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதை மொத்த குடும்பமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில், ஜனனி கதிர் செருப்பு கிடைத்தது என்று சொல்றது எல்லாம் பொய் தான் என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி என்னடி உளர்ர என்று கேட்க, அதற்கு ஜனனி சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த கதிரே அவங்க அண்ணனை ஏதோ பண்ணிட்டாரு என்று நான் சொல்றேன் என்று சொல்ல, கதிர் அதிர்ச்சியில் இருக்கிறார். அதைக் கேட்டு பதறிப் போன விசாலாட்சி சக்தி இவ பேச்சி கொஞ்சம் கூட சரியில்லடா என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கதிரின் சட்டையை பிடித்து ஈஸ்வரி அவர பார்க்க ஊம் என்று சொல்லு, நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சண்டை போட அதற்கு விசாலாட்சி அவன இங்க பேசுனது பத்தாதுன்னு அங்க போய் பேசி எங்கையாவது அனுப்புவேன்னு பார்த்தியா? என்று திட்டுகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் குணசேகரன் இனி எப்போது வீட்டிற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனாக நடிகர் வேலராமமூர்த்தி சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கும் நிலையில் அந்த எபிசோடுகள் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
அதுபோல ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தபடியே கதிர் கன்னத்தில் ஈஸ்வரி அடித்துவிட்டார். இந்த நிலையில் இனி கதிர் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என்று இன்றைய எபிசோட்டில் தெரியவரும். ஆனாலும் விசாலாட்சி குணசேகரனுக்கு அம்மா என்பதை நிரூபித்து பல பேருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications