ஜான்சி ராணிக்கு செக் வைத்த அப்பத்தா.. குணசேகரனின் மாஸ்டர் பிளான் உடைந்தது.. முடிவு இப்படியா ஆகணும்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குழந்தைகளை வைத்து குணசேகரன் புது பிளான் போட அது பற்றி அப்பத்தா அனைவருக்கும் ரகசியத்தை உடைக்கிறார்.

அதுபோல எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஜான்சி ராணியை ஒரே வார்த்தையால் அப்பத்தா ஆப் செய்து விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் நேற்று எபிசோடிலும் வழக்கம் போல காரிலேயே எல்லோரும் பயணத்தை தொடங்கி கொண்டிருக்கின்றனர். சக்தி, ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ஆதிரை, ரேணுகா எல்லோரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது அவர்களோடு வந்த ஜான்சி ராணி எனக்கு வயிற்றைக் கலக்குகிறது. வண்டியை ஓரமாக நிறுத்துங்கள் என்று சொல்லி அவர் காலைக்கடன் முடித்ததை வைத்து ஒரு எபிசோடு ஒட்டி இருந்தனர்.
அதுபோல இன்னொரு பக்கத்தில் கதிர், கிள்ளிவளவன், கரிகாலன் மூன்று பேரும் இருக்கும் இடத்தில் இருந்து நான் என்னுடைய நண்பருக்கு அடிபட்டு நிறைய ரத்தம் போயிட்டு அவனுக்கு ரத்தம் கொடுக்கப் போறேன் என்று அவசரமாக கதிர் அங்கிருந்து கிளம்பி இருந்தார். அதைத் தொடர்ந்து டீ குடிப்பதற்கு காசு கொடுக்க வழி இல்லாமல் கரிகாலன் டீக்கடையில் திணறிக் கொண்டிருந்தது தான் நேற்றைய எபிசோடில் நடந்தது இது ரசிகர்களுக்கு சலிப்படைய வைத்திருந்தது.

ஏற்கனவே கிட்டத்தட்ட நான்கு நாட்களாக இவர்கள் ஊருக்கு போறோம் ஊருக்கு போறோம் என்று ரோட்டிலேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல வீட்டிற்கு வந்த குணசேகரன் வீட்டில் தர்ஷினியை டீ போட சொல்லி பிரச்சனை செய்தார். அதற்கு பிறகு தர்ஷினி டீ போட்டுக் கொடுத்ததும் அதைக் குடித்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று பாராட்டியபடியே அடுத்த சமையல் வேலைகளையும் பார்க்க சொல்லி கிச்சனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதை பார்த்த ஈஸ்வரியின் அப்பாவும் நந்தனியின் அப்பாவும் அடுத்த தலைமுறை பெண்களையும் குணசேகரன் கிச்சனுக்குள் அடைத்துவிட்டான் என்று சொல்லிவிட்டு தங்களுடைய இயலாமையால் பதில் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி போயிருந்தனர். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அதனால் இனி என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது.
இப்படியே இந்த வாரம் முழுக்க இவர்கள் காரிலேயே வலம் வருவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறது. காரணம் காரில் வலம் வந்த குணசேகரனின் வீட்டு பெண்கள் இன்று அப்பத்தாவின் ஊருக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

வந்ததுமே ஜனனி அப்பத்தாவிடம் மனசுல எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள வரப்போ ரொம்ப லேசா இருக்கிற மாதிரி இருக்குது அப்பத்தா என்று சொல்ல, அதற்கு வழக்கம் போல ஜான்சி ராணி கொஞ்சம் பார்த்து ஆடுங்க என்று நக்கல் செய்ய அப்போது அப்பத்தா நீ ஏதோ கேஸ்ல மாட்டுனல்ல? ஒரே ஒரு போன் கால் பண்ணுனா போதும் போலீஸ் வந்து உன்னை அப்படியே அள்ளிட்டு போயிடும் என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து ரேணுகாவிற்கு தர்ஷன் போன் செய்து வீட்டில் நடக்கும் விஷயத்தை பற்றி சொல்ல அதற்கு அப்பத்தா குணசேகரன் அவனுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். இப்ப வரப் போற குணசேகரன் நீயா நானா என்று பார்த்திடலாம் என்கிற ஒரு முடிவோட வருவான் பாரு என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications