எதிர்நீச்சல்: குணசேகரன் என்ட்ரியில் டீம் செய்த சம்பவம்.. போலீஸ் மூலமாக கதிருக்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வருகிறார் வருகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் குணசேகரன் பற்றி விசாரிப்பதற்காக வீட்டிற்குள் வந்த போலீஸ் கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

 Ethirneechal Serial 2023 October 2nd episode full update

அதே நேரத்தில் நந்தினி ரேணுகாவும் வீட்டில் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ரேணுகா தன்னை அடித்ததாலும், ஜனனி தன் மீது பழி சொல்லியதாலும் கதிர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டில் மீண்டும் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஞானம் இவன் குடிப்பதற்கு இப்ப ஒரு சாக்கு கிடைத்துவிட்டது. இதை சொல்லி இவன் குடிச்சுகிட்டு பிரச்சனை பண்ணுகிறான் என்று கதிரை திட்டிக் கொண்டிருந்தார்.

 Ethirneechal Serial 2023 October 2nd episode full update

ஆனால் கரிகாலன் மட்டும் கதிருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்ததால் தன்னுடைய வாரிசு இனி கரிகாலன் தான். கரிகாலன் எந்த வீட்டு மருமகள் இல்லை மகன் என்று சொல்ல, அதைக்கேட்டு பயந்து போன கரிகாலன் ஐயையோ மாமா வேண்டாம்.நான் மகன்னா, ஆதிரை மகள் அப்போ உறவுமுறை இடிக்குது. நான் உங்க வீட்டு செல்ல மருமகனாகவே இருந்துட்டு போகிறேன். என்னுடைய உயிர் ஆதிரைக்கு, உடல் இந்த குடும்பத்திற்கு என்று டயலாக் பேசிக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் கிச்சனில் வீட்டு மருமகள் அனைத்து சாப்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு டைனிங் டேபிளில் கொண்டு வைக்க, அதை பார்த்த விசாலாட்சி என்னடி பண்ணுறீங்க என் மகன் மேல பழியை போட்டுக்கிட்டு, இப்படி வித விதமா ஆக்கி வச்சுக்கிட்டு இருக்கீங்களா? என்று கேட்க, இதற்கு முன்பு எங்களை இந்த வீட்டுக்கு கட்டி கூட்டிட்டு வந்த புதுசுல உங்க மகன் கட்டையால் எல்லாம் அடிச்சி எங்களை காயப்படுத்தி இருக்காரு.

 Ethirneechal Serial 2023 October 2nd episode full update

நாங்க கை தூக்க முடியாமல் வலியில் இருக்கும் போது சோறு ஆக்கலையா? நாங்க திங்க வேண்டாமா? என்றெல்லாம் நீங்க டயலாக் பேசுனதெல்லாம் மறந்து போச்சா? எங்களுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா? நாங்க கஷ்டத்துல இருக்கும்போது நீங்க வந்து சாப்பாடு கேட்டவங்க தானே?. இப்ப நீங்க கவலையில் இருக்கும் போது சாப்பாடு செய்ய கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? நாங்க எங்க பிள்ளைகளுக்காக சாப்பாடு செய்ய தான் செய்யப் போறோம்.

உங்களுக்கு வேணும்னா சாப்பிடுங்க இல்லன்னா எடுத்துட்டு போறோம் என்று சொல்ல, கதிர் நான் இந்த சாப்பாட்டை எல்லாம் சாப்பிட மாட்டேன் என்று வீரப்பா பேசியதால நந்தினி அந்த சாப்பாடுகளை எடுத்துவிட்டு போயிருந்தார். ஆனால் அடுத்த நாள் காலையில் போதை தெளிந்து வந்த கதிர் தனக்கு தோசை ஊற்றித் தரும்படி நந்தினி இடம் கேட்க, நேற்றைக்கு ராத்திரி தானே எங்க கையால சாப்பிட மாட்டேன் என்றெல்லாம் டயலாக் பேசினீங்க? அதனால நாங்க காலையிலேயே சாப்பாடு எல்லாம் செஞ்சு முடிச்சு சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி போட்டாச்சு என்று சொல்ல, கதிர் அவர்களிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சக்தியும் ஜனனியும் போலீஸ் ஆபீசர்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர அவர்கள் உங்க அண்ணன் குணசேகரை எங்க என்று ஞானம் மற்றும் கதிரிடம் விசாரிக்கின்றனர். அதற்கு கதிர் வழக்கம் போல போலீஸ் ஆபிஸரிடம் திமிரு செய்து சக்தியை திட்ட, அதற்கு போலீஸ் அதிகாரி எங்க கண்ணு முன்னாடியே நீ எந்த துள்ளு துள்ளுதியே உன்னை தூக்கி உள்ள வச்சு தோலை உரிச்சிடுவேன்.நாலு போட்டா தான் சரி வரும் என்று திட்ட கதிர் கதிர் பேச முடியாமல் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

இப்படியான நிலையில் நேற்றைய ப்ரோமோகளில் பில்டப் செய்தபடி கடைசி வரைக்கும் ஆதி குணசேகரன் அறிமுகமாகவே இல்லை. ஆனாலும் பிரமோவில் மட்டும் காட்டிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எபிசோடில் நேற்று விசாலாட்சி தன்னுடைய மகன் வந்து கொண்டே இருப்பதாக சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சக்தி மற்றும் ஜனனியால் போலீஸ் ஆபீஸர் வீட்டுக்கு வந்து விசாரணை செய்து இருப்பதால் இன்றைய எபிசொட்டில் குணசேகரன் என்ட்ரி ஆவார் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+