எதிர்நீச்சல்: கெளதமிடம் இருந்து தப்பி வந்த கதிர்.. ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான குடும்பம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 31ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கௌதமிடமிருந்து தப்பித்து கதிர் ரத்தம் சொட்ட சொட்ட குணசேகரனிடம் வந்து சேர்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் நடந்து கொள்ளும் விதம் குறித்து தர்ஷன் ஈஸ்வரியிடம் சண்டை இடுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் நேற்று எபிசோடில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த காட்சிகள் கடைசி நேரத்தில் சொதப்பி விட்டது. அதாவது கௌதமிடம் மாட்டி இருந்த கதிருக்கு கௌதம் ஏதாவது தண்டனை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வீர வசனம் பேசிக் கொண்டிருந்த கௌதம் தன்னுடைய அடியாள் மூலமாக போலீஸ் இடம் சிக்கிவிட்டார்.

கதிரை சேரில் கட்டி வைத்துக்கொண்டு நான் இப்போது உன்னுடைய கதையை முடித்து விடுவேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அண்ணனுடைய கதையை ஜீவானந்தம் முடித்து விடுவார் என்று கெளதம் பேசிக் கொண்டிருக்கும் போது வெளியே கௌதமின் அடியாள் நின்று கொண்டிருப்பதை பார்த்த போலிஸ் இது யார் வீடு என்று விசாரிக்க உள்ளே வர இவர்கள் எல்லோரும் போலீசை கேட்டதும் கதிரை விட்டு விட்டு ஓடி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இதுவரைக்கும் வீட்டு பெண்களை குணசேகரனுக்கு அடுத்தபடியாக ஆட்டி படைத்துக் கொண்டிருந்த ஜான்சி ராணியை சக்தி லெப்ட் ரைட் வாங்கி இருந்தார். இந்த நிலையில் இனி சக்தி வாய் திறந்து அதிகமான டயலாக் பேசினால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமையலுக்கு காய்கறி வெட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தர்ஷன் அவரு உன்னை நடக்கிற விதம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலாமா. உன்னோட திறமை தெரியாமல் நீ இங்கே இருக்கிற. எங்களுக்காக நீ ஏதாவது செஞ்சு தான் ஆகணும் என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன், கரிகாலன், வீட்டு பெரியவர்கள் உடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு ரத்தம் சொட்ட சொட்ட கதிர் வந்து நிற்கிறார். கதிரை கண்டதும் குணசேகரன் என்னாச்சு என்று விசாரிக்க அதற்கு கரிகாலன் பிரச்சனைன்னு வந்துட்டா நாம இறங்கி அடிக்கணும் என்று டயலாக் பேசுகிறார். அதைத் தொடர்ந்து ரேணுகா நந்தினியிடம் அடிபட்டு இருக்குல்ல. நீ பார்க்க வேண்டாமா? என்று கேட்க, அதற்கு நந்தினி உயிர் ஒன்னும் போகலையே அடிதானா பட்டு இருக்கு என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி இது லேசான விஷயம் இல்ல என்று சொல்கிறார்.

இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் பெரும் எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துவிட்டது. இனி கௌதம் சொதப்பியது போல ஜீவானந்தம் சொதப்பாமல் கதிர் குணசேகரனுக்கு ஏதாவது தண்டனை கிடைக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் எப்போதுமே வில்லனே ஜெயித்துக் கொண்டிருப்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி கதை எப்படி மாறப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications