எதிர்நீச்சல்: அறிமுகமானதும் மாரிமுத்துவின் டயலாக்கை மாற்றிய வேல ராமமூர்த்தி.. ஜனனி கேட்ட கேள்வி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகமான இரண்டாவது எபிசோடு நேற்று ஒளிபரப்பானது.
இதில் ஏற்கனவே நடித்து வந்த நடிகர் மாரிமுத்து பேசி வந்த எம்மா ஏய் என்ற வார்த்தைக்கு பதிலாக வேல ராமமூர்த்தி அவருடைய ஃபேவரிட் வசனமான "இழுந்தாரி பய" என்ற டயலாக்கை நேற்றைய எபிசோடில் பேசி இருந்தார்.

அதோடு தன்னுடைய ஆரம்ப காலம் குறித்தும் நேற்றைய எபிசோடில் ஆதி குணசேகரன் பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்
அந்த வகையில் போலீஸ் ஆபீசர்களிடம் இருந்து கதிர் மற்றும் ஞானம் இருவரையும் காரில் கூட்டிக் கொண்டு வந்த குணசேகரன் கோவில் ஒன்றில் உட்கார்ந்து தன்னுடைய தம்பிகளோடு பேசிக் கொண்டிருக்கிறார். பல நாட்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணனை பார்த்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் சந்தோஷமாக அவரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கதிர் அண்ணே இப்பவும் நீங்க சிக்குனு இப்படி இருக்கீங்களே அப்போ இள வயசுல எப்படி இருந்திருப்பீங்க? கண்டக்டரா நீங்க வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் உங்களை சுத்தி இருக்குமே என்று கேட்க, அதற்கு ஆமாம் கண்டிப்பாக கண்டக்டரா நான் வேலை செய்கிறபோது பஸ்ஸில் எத்தனை பொண்ணுங்க என்ன சைட் அடிச்சின்னு தெரியுமா? ஆனா நான் வேலையில கவனமா இருப்பேன்.
எத்தனை பேரு என்னை மடக்கி போட பார்த்தாலும் நான் வேலைன்னு ஓடிக்கிட்டே இருப்பேன். அப்படி பணமா சம்பாதிச்சு எஸ்கேஆர் முன்னாடி போய் கொட்டுனேன். எத்தனையோ பேரு என்ன பார்த்தாலும் நான் ஒருத்தி மேல மட்டும் தான் கண்ணு வச்சேன். அவளை தான் மனசார விரும்பினேன். அவ யார் தெரியுமா சாருலதா அவளை பொண்ணு கேக்குறதுக்காக தான் எஸ்.கே.ஆர்ரை துணை மாப்பிள்ளையா கூட்டிட்டு போனேன். ஆனா சாருலதா, நான் படிக்கலைன்னு சொல்லிட்டு எஸ் கே ஆரை புடுச்சுருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா? என்று கோபமா கேட்கிறார்.
அதற்கு ஜனனி எப்பவும் உங்களுக்கு உங்க சந்தோசம் மட்டும் தானே முக்கியம். அவங்களுக்கு உங்களை பிடிக்கல அப்புறம் எப்படி அவங்க உங்களை கல்யாணம் பண்ண முடியும். ஆனா நீங்க ஆசைப்பட்டால் அவங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணி தான் ஆகணும்னு என்ன ரூல்ஸ் இருக்கா? என்று கேட்க அதற்கு குணசேகரன் பதிலே சொல்லாமல் அசட்டையாக சிரித்து விடுகிறார். பிறகு தம்பிகளை வாங்கப்பா வீட்டுக்கு போவோம் என்று கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
அப்போதும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி தன்னை அடித்ததை பற்றி கதிர் குணசேகருடன் போட்டுக் கொடுக்க குணசேகரன் உடனே கோபத்தில் பாட்ட போடு டா டென்ஷனா இருக்கு என்று சொல்ல அங்கு ஜெயிலர் திரைப்படத்தில் உள்ள காவலா பாட்டு போட அதற்கு ஞானம் அண்ணனுக்கு இந்த பாட்டெல்லாம் பிடிக்காதுடா பழைய பாட்டு போடு என்று சொல்ல, வேண்டாம் இந்த பாட்டு இருக்கட்டும் நான் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தேன். அதுல அந்த செவத்த புள்ள நல்லா டான்ஸ் ஆடுச்சு.
இந்த மாதிரி பாட்ட கேட்கும் போது தான் நம்ம ரத்தம் சூடாகுது அப்படியே இறந்தாரி பைய மாதிரி இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அதை ஆச்சரியமாக கதிரும் ஞானமும் பார்க்கின்றனர். அதே நேரத்தில் நந்தினி இன்னைக்கு மட்டும் பெரியவர் வந்து வீட்டு ஆட்கள் முன்னாடி என்ன அவமானப்படுத்தட்டும் அதற்குப் பிறகு இருக்கு என்று கோபத்தில் காத்திருக்கிறார். அதை நேரத்தில் விசாலாட்சி தன்னுடைய மகன் வரப்போற சந்தோஷத்தில் இருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications