எதிர்நீச்சல்:தர்ஷன் கேட்ட கேள்வி..அடிக்க பாய்ந்த கதிர்..வேடிக்கை பார்க்கும் குணசேகரன்.. செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா கேட்ட கேள்விக்கு தர்ஷன் சொன்ன பதிலை கேட்டு கோபமான கதிர் அடிக்க போகிறார்.

அப்போது அனைவரையும் அவமானப்படுத்தி ஈஸ்வரி எதிர்பாராத பதிலை சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் முதல் முறையாக நேற்றைய எபிசோடில் தர்ஷன் ஜீவானந்தத்தை சந்தித்திருந்தார். ஆரம்பத்தில் வெண்பா ஈஸ்வரி இடம் பேசும் போது தர்ஷனின் முகம் மாறியது. பிறகு தன்னிடமும் பாசமாக வெண்பா பேசுவதை பார்த்து தர்ஷனின் மனம் மாறியது. அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் அங்கு வந்தபோது ஜீவானந்தத்திடம் உங்களை பற்றி எங்க அப்பா சித்தப்பா எல்லாம் பேசும் போது நான் ஆரம்பத்தில் தப்பாக நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போது நேரில் உங்களை பார்த்த பிறகு உங்களிடம் பேசியதும் நீங்கள் அப்படி எல்லாம் இல்லை என்பது புரிந்து விட்டேன் என்று சொல்லி இருந்தார். அதைத்தொடர்ந்து ஜீவானந்தம் ஈஸ்வரி பற்றியும் அவர் படித்த படிப்புக்கு சரியான வேலையும் பார்க்கவில்லை அதற்கான மரியாதையும் கிடைக்கவில்லை அது போல தான் உங்க வீட்டில் இருக்கும் சித்திகளின் நிலைமையும் இருக்கிறது என்று பெண்கள் பற்றி பல விஷயங்களை ஜீவானந்தம் பகிர்ந்து இருந்தார்.
அதுபோல தன்னுடைய மனைவி மற்றும் குழந்தை குறித்தும் உருக்கமாக பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து வீட்டில் நந்தினி தான் வாங்கிய சம்பளப் பணத்தில் எல்லோருக்கும் கிப்ட் வாங்கி கொடுத்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் ஈஸ்வரிக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததும் ஸ்வீட் கொடுத்து நந்தினி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோல எபிசோடின் கடைசியில் குணசேகரன் வீட்டு மாடியில் நின்று கெத்தாக பார்ப்பது போன்று முடிவடைந்து இருந்தது.

அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரியும் தர்ஷனும் வாசலில் நிற்கும் போது பட்டம்மாள் தர்ஷன் இடம் நீ ஏம்பா காலேஜுக்கு பீஸ் கட்டவில்லை என்று கேட்க, அதற்கு தர்ஷன் அந்த ஆளு காசுல படிக்க எனக்கு விருப்பம் இல்ல என்று சொல்ல, அதற்கு ஞானம் ஏய் என்ன அந்தாளு இந்தாளுன்னு பேசிகிட்டு இருக்க என்று கேட்க, அப்போது கதிர் தர்ஷனை அடிக்க பாய்ந்து போகிறார்.

அதற்கு ஈஸ்வரி என் புள்ளையை கேள்வி கேட்கிற உரிமை இந்த வீட்டுல எவனுக்கும் கிடையாது, நான் சொல்லிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் குணசேகரன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாடியில் தூங்கிக் கொண்டிருக்கிறான் என் பிள்ளை என்று விசாலாட்சி கூறி இருப்பார். அதுபோல இப்பொழுது மாடியில் நின்று இவர்களுடைய சண்டையை பார்த்து முறைத்தபடி இன்றைய எபிசோடில் குணசேகரன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications