எதிர்நீச்சல்: பேசாமலே மிரட்டிய குணசேகரன்.. கதிரால் மாறப்போகும் கதை.. இதை கவனிச்சீங்களா? கிரேட் செயல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் எதிர்பார்க்காத காட்சிகள் பல இருந்தது. அதோடு ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது.
மீண்டும் குணசேகரனாக நடிகர் மாரிமுத்து ஏற்கனவே நடித்த காட்சிகள் மீண்டும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது நேற்றைய காட்சிகளுக்கு தகுந்தது போலவே இருந்தது.

ஆனால் எந்த இடத்திலும் குணசேகரன் பேசவே இல்லை. அதோடு எபிசோடின் கடைசியில் கதிர் கேட்ட கேள்வி யோசிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஈஸ்வரி தர்ஷனுக்கு பைக் வாங்கி கொடுத்து இருந்ததால் கோவிலில் அதற்கு பூஜை போட்டுவிட்டு கிளம்பும் நேரத்தில் அங்கு ஒரு பெண் ஈஸ்வரியின் மோட்டிவேஷன் வீடியோவை தான் பார்த்திருப்பதாகவும் தன்னுடைய வாழ்க்கையில் அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் ஈஸ்வரியை பாராட்டி அவரோடு புகைப்படம் எடுத்திருந்தார். ஈஸ்வரியும் அங்கிருந்து கிளம்பி பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது வீட்டில் ஈஸ்வரி மற்றும் தர்ஷனை காணாததால் குணசேகரன் கையில் இருக்கும் போனை பார்த்தபடியே அவ்வப்போது முறைத்துக் கொண்டு மாடியில் நடந்து கொண்டே இருந்தார். அதுபோல கதிரும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தார். அதை தொடர்ந்து ஜனனியும் சக்தியும் வீட்டிற்கு வெளியே வந்து ஈஸ்வரி மற்றும் தர்ஷனை எதிர்பார்த்து காத்திருக்க அப்போது தர்ஷன் பைக்கில் வந்து இறங்குகிறார். பைக்கை பார்த்ததும் சக்தி பைக் சூப்பராக இருக்கிறது என்று சொல்ல, இது அம்மா எனக்காக வாங்கி கொடுத்து இருக்காங்க என்று தர்ஷன் சந்தோஷப்படுகிறார்.
பிறகு அந்த பைக்கை சக்தி ஓட்டி பார்க்கிறார். இதை எல்லாம் குணசேகரன் ஒரு பக்கமும் கதிர் ஒரு பக்கமும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு பைக்கை வீட்டிற்குள் கொண்டு வந்ததும் அந்த நேரத்தில் ஸ்கூலில் இருந்து வரும் தர்ஷினி பைக்கை பார்த்ததும் பைக்கில் ஏறி உட்கார்ந்து சூப்பரா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டிற்குள் இருந்து கதிர் ஞானம் கரிகாலன் மூவரும் வெளியே வருகின்றனர். அப்போது கரிகாலன் இது என்ன அசிங்கமா இருக்கு பொம்பள புள்ள பைக்கும் மேல கால போட்டு இப்படி உட்கார்ந்து இருக்கா என்று ஏற்றி விடுகிறார்.
அதற்கு நந்தினியும் ரேணுகாவும் இதில் என்ன அசிங்கம் இருக்கு பொம்பள புள்ள பைக் ஓட்டுனா பைக் போகாதா என்று திட்ட, அதற்கு ஞானம் எல்லோரையும் திட்டுகிறார். இப்படி பைக் வாங்கி கொடுத்து இருப்பது நல்லா இல்ல. யார் கிட்ட கேட்டுட்டு பைக் வாங்கினீங்க? என்று ஈஸ்வரியை திட்ட அதற்கு சக்தி அதான் அவன் வச்சிருந்த பைக்கை புடுங்கி வைத்து விட்டாயே என்று சொல்ல அதற்கு கதிர் நான் பிடுங்கி வைப்பேன் பிறகு கொடுப்பேன். ஆனா அவன் எப்படி இந்த பழைய பைக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வரலாம் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஞானம் அப்பா செத்த பிறகு 13 வயசுல இருந்து எங்க அண்ணன் தான் எங்கள கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டாரு என்று சொல்ல, அதற்கு தர்ஷன் உங்க அப்பா செத்து கஷ்டப்படுத்துனாரு ஆனா இந்த ஆளு இருந்து கஷ்டப்படுத்துறாரு என்று சொல்ல, அதற்கு ஞானம் தர்ஷனை அடித்து விடுகிறார். பிறகு அனைவரும் திட்டி சண்டையிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகின்றனர்.

அதைத் தொடர்ந்து தர்ஷனும் தர்ஷனியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தர்ஷினி இடம் தர்ஷன் நான் ஜீவானந்தம் சாரை பார்த்தேன். அவர் ரொம்பவே நல்லவர் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கதிர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தர்ஷினி நமக்கு அந்த ஜீவானந்தமே அப்பாவா வந்திருக்கக் கூடாதா? என்று சொல்ல அதைக் கேட்டு கோபமான கதிர் அங்கு பிரச்சனை செய்கிறார். அந்த தாடிக்காரன்தான் உனக்கு அப்பாவா வேணுமா? என்று கேட்க அங்கே வரும் ஈஸ்வரி கோபத்தில் கதிரை திட்டுகிறார்.
இதையெல்லாம் ரூமிற்குள் இருந்து குணசேகரன் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் எதுவுமே வாய் திறக்கவில்லை. இது குறித்து எபிசோட்டின் கடைசியில் பிள்ளைகளுக்கு அப்பனா அந்த தாடிக்காரன் வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்குது. ஆனா ரூமிற்க்குள் இருக்கிற இந்த மனுஷன் இதுக்கு ஒண்ணுமே பேசாம இருக்காரு, எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா இருக்காரு என்று புலம்பிக் கொண்டிருக்க, அப்போதும் கடைசியாக குணசேகரன் யோசிப்பது போன்று காட்சிகளுடம் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
இப்படி இருக்கையில் இனி குணசேகரன் ஏதாவது பேசுவது போன்ற காட்சிகள் இன்றைய எபிசோட்டில் இருக்குமா? அல்லது இன்று புது குணசேகரன் அறிமுகமாக போகிறாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் எப்படியும் இன்றைய எபிசோட்டில் பெரும் பஞ்சாயத்து ஒன்று காத்திருக்கிறது என்பது தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications