எதிர்நீச்சல்: மாரிமுத்துவுக்காக அவசரமாக மாற்றப்பட்ட கதை.. செல்போனில் இருந்த ஆதாரம்.. கிரேட் முயற்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அவசரமாக கதை மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் குணசேகரன் ஆக எடுத்து வந்த மாரிமுத்து காலமானதால் அவருடைய கதாபாத்திரத்தில் அதிரடியான மாற்றம் செய்திருக்கின்றனர்.
அதாவது இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து காலமானதால் அவருடைய கதாபாத்திரத்தில் அதிரடியான மாற்றம் செய்திருக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று கடந்த வாரம் காலமானார். அவருடைய இறப்பு சீரியல் ரசிகர்களையும், அவருடைய நண்பர்களையும், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் பலர் இருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் மாரிமுத்து நடித்துக் கொடுத்த எபிசோடுகள் கடந்த வாரத்தோடு ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது. ஆனாலும் அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களாகவே அவர் ஆரம்பத்தில் நடித்த காட்சிகளை தற்போதைய காட்சிகளுக்கு தகுந்தது போல எடிட் செய்து ஒளிபரப்பாகி வந்தனர். இது குறிக்கும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குணசேகரன் இதுவரைக்கும் கம்பீரமாக பேசிக் கொண்டிருந்த நிலையில் இப்போது சில நாட்களாகவே அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது போன்ற காட்சிகள் வருவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று பலர் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சீரியல் அவசரமாக கதை மாற்றப்பட்டிருக்கிறது. நேற்றைய எபிசோட்டில் குணசேகரன், "நான் எதிர்பார்த்தபடி என்னுடைய மனைவி இல்லை. அவள் நடத்தை கெட்டவளாக மாறிவிட்டாள். என்னுடைய பிள்ளைகளும் என்னை அப்பா என்று சொல்வதற்கு அசிங்கப்படுகிறார்கள். அந்த அளவிற்கு நான் மோசமாக ஆகிவிட்டேன். இனி நான் இந்த வீட்டில் இருந்து பிரயோஜனம் இல்லை" என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
அதோடு என்னுடைய தம்பி ஞானம் மற்றும் கதிர் மட்டும் தான் எனக்கு எல்லாமே. அதனால் என்னுடைய தம்பிகள் பெயருக்கு சொத்துகளை மாற்றி விடுங்கள் என்று ஆடிட்டரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார். இது நேற்றைய எபிசோடில் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த கடிதத்தை பார்த்ததும் ஞானம் கதறி அழுததை பார்க்கும்போது நிஜத்தில் மாரிமுத்து இல்லையே என்பதை நினைத்து அவர் கதறி அழுதது போன்றே இருந்தது.
அதுபோல நந்தினி, ரேணுகா எல்லாருமே இதில் பெரியதாக பாதிக்கப்பட்டது போல காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் எபிசோட்டுக்காக இப்படி நடித்து இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் எபிசோடின் கடைசியாக குணசேகரன் செல்போனை சக்தி பார்த்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் அதில் ஏதேனும் ஆதாரம் இருக்குமா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
நேற்றைய முன் தினம் எபிசோட்டில் தர்ஷனும் தர்ஷினியும் நமக்கு ஜீவானந்தமே அப்பாவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொன்னதை கேட்டு அதில் சண்டை போடும் போதும் கூட குணசேகரன் அறைக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருப்பது போன்று காட்சிகள் இருந்தது. அதைக் குறித்து கடைசியில் கதிர் இந்த மனுஷன் எல்லாத்தையும் ரூமுக்குள் இருந்து கேட்டுக் கொண்டே இருக்காரே? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்ன செய்யப் போகிறாரோ? என்று கூறியிருந்தார்.
அப்போது நமக்கு தெரிந்தது தான் அடுத்த நாள் குணசேகரன் காட்சிகள் இருக்காது என்பது அது நேற்றைய எபிசோடில் நடந்தும் விட்டது. அதுபோல நேற்று சக்தி குணசேகரின் செல்போனை பார்த்துக் கொண்டே இருப்பதால் அதில் ஏதேனும் ரகசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications