எதிர்நீச்சலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. கச்சிதமாக காய் நகர்த்திய டீம்.. இனி இதுதான் கதையா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் செப்டம்பர் 18ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போனது போல கதையை கொண்டு போயிருக்கின்றனர்.

அதே நேரத்தில் கடிதத்தை பார்த்து மொத்த குடும்பமும் கதறி அழுததை பார்க்கையில் அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிக்கு காரணமாக இருந்த நடிகர் மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்பிற்கு பிறகும் அதிகமான ரசிகர்கள் மாரிமுத்து குறித்து வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பல ரசிகர்கள் தங்களால் சீரியல் பார்க்க முடியவில்லை என்று வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மாரிமுத்துவை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதால் எபிசோட்டின் இடை இடையே அவர் வருவது போன்று அவர் ஆரம்பத்தில் நடித்த காட்சிகளை வைத்து வருகின்றனர். இது பலருக்கும் ஆறுதலை கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் அவரை மீண்டும் பார்ப்பது பலருக்கு பயமாக இருப்பதாகவும் வருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதோடு சில எபிசோடுகளாகவே மாரிமுத்து எந்த காட்சிகளிலும் பேசாமல் அமைதியாகவே வருவது போன்று இருக்கிறது.
இது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம் குணசேகரன் தன்னுடைய கர்ஜிக்கும் குரலால் பேசுவது தான் அதிகமான ரசிகர்களுக்கு பிடித்தது. ஆனால் இப்போது அவர் எதுவுமே பேசாமல் முறைத்தபடியே இருப்பது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தர்ஷினி மற்றும் தர்ஷன் இருவரும் நமக்கு ஜீவானந்தம் அப்பாவாக வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தனர். அதற்கு கதிரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரூமிற்குள் இருந்து குணசேகரன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது போன்றே காட்சிகள் அமைந்திருந்தது.

அதே நேரத்தில் கடைசியில் கதிர் இதை எல்லாம் கேட்டுக்கொண்டு உள்ளுக்குள்ளே இந்த மனுஷன் உட்கார்ந்து இருக்காரே என்று தன்னுடைய வருத்தத்தை அழுத்தமாக பதித்து இருந்தார். அதிலிருந்து நமக்குத் தெரிந்தது இன்றைய எபிசோடில் கண்டிப்பாக குணசேகரன் எங்கேயாவது போவது போன்று தான் காட்சிகள் இருக்கும் என்று, இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரனை காணவில்லை என்று விசாலாட்சி கேள்வி கேட்க அப்போது வீட்டில் எல்லாரும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் குணசேகரன் வழக்கமாக கும்பிடும் மீனாட்சி அம்மன் போட்டோவின் கீழே ஒரு கடிதம் இருக்கிறது. அதை படித்து பார்த்து ஞானம் அழுது கொண்டிருக்கிறார் அதே நேரத்தில் ஞானம் அழுதது நிஜத்தில் நடிகர் மாரி முத்து இல்லை என்பதை நினைத்து அழுவது போன்றே இருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்று சீரியலை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எதிர்நீச்சலில் ஆதி குணசேகராக எந்த நடிகர் நடிக்க போகிறார் என்று உறுதியாக சீரியல் டீம் தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குணசேகரனாக புது நடிகர் வருவது வரைக்கும், குணசேகரன் எங்கேயோ போய்விட்டார் என்பது போன்று தான் காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் வீட்டிற்கும் மீண்டும் வரும் ஆதி குணசேகரன் ஆக புது நடிகர் வர இருக்கிறார். இதுவும் ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் இனி மாரிமுத்து வரவே மாட்டார் என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications