குணசேகரன் வருவான் “ஆனால்” அப்பத்தா சொன்னது..!? வில்லியாக மாறும் விசாலாட்சி.. கதையே மாறிப்போச்சு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் குணசேகரன் எழுதிய கடிதத்தை வைத்து அப்பத்தா பலருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் மருமகள்களுக்கு ஆதரவாக இருந்த விசாலாட்சி இப்போது அவர்களுக்கு வில்லியாக மாறுகிறார்.

அதே நேரத்தில் மீண்டும் ஜான்சி ராணியை வீட்டிற்குள் விசாலாட்சி கூட்டிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையிலே கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.. ஏற்கனவே குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து காலமானதை தொடர்ந்து அவர் கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் நேற்று எபிசோட்டில் ஆதி குணசேகரன் பற்றி பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வருகிறது.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் எங்கே போனார் என்று தெரியாமல் மொத்த குடும்பமும் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆடிட்டர் என்னிடம் நேற்று இரவு வந்து குணசேகரன் சொத்து விஷயத்தில் பல விஷயங்களை செய்து விட்டு போயிருக்கிறார் என்று சொல்லி தன்னுடைய சொத்துக்கள் முழுவதையும் தன்னுடைய தம்பி, அம்மா, கரிகாலன் எல்லோருக்கும் பிரித்து எழுதி வைத்திருப்பதை பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதே நேரத்தில் இனி குணசேகரன் கேரக்டரில் வேறு நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்காது. மாரிமுத்துவுக்கு நிகர் அவர் மட்டும்தான் என்பதை புரிந்து கொண்ட சீரியல் தரப்பினர் அவர் வீட்டை விட்டு காணாமல் போனது போன்று கதையைக் கொண்டு போய் இருக்கின்றனர். அதே நேரத்தில் நேற்று ஜோதிடர் மூலமாக குணசேகரனுக்கு இன்னொரு அண்ணன் இருப்பது போன்று கதை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜான்சி ராணி கெத்தாக வீட்டிற்குள் வருகிறார். அப்போது குணசேகரனுக்கு போடும் அதே மியூசிக் போடப்படுகிறது.
அதுபோல குணசேகரன் எழுதி வைத்துவிட்டு போன கடிதத்தை அப்பத்தா படித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது "இது என்ன புதுசா வா பண்ணுறாரு. இந்த ட்ராமாவ தான் அடிக்கடி பண்றாரே" என்று நந்தினி சொல்ல, அதற்கு அப்பத்தா, "இந்த தடவை குணசேகரன் திரும்ப வருவான். ஆனால் வரப்போற குணசேகரன் ரொம்ப ஆபத்தானவனா வரப் போறான்" என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியோடு யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி இனி இங்கேயே இருக்கட்டும் என்று விசாலாட்சி சொல்ல, அதற்கு நந்தினி, "அத்தை கண்டதை கொண்டு நடு வீட்டுல வைக்கிறேனு சொல்றீங்க..?" என்று கேட்க, அதற்கு "கண்டவளுகளோடு கூத்தடிச்சி தான் என் புள்ளையை நான் தொலைச்சிட்டு நிற்கிறேன்" என்று சொல்ல, அதை கேட்டு நந்தினி, ரேணுகா, ஜனனி மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் வேகம் எடுப்பதற்காக கதையில் பல அதிரடியான ட்விஸ்ட்டுகள் வைத்திருக்கும் இயக்குனரின் திறமை பாராட்டுக்குரியது தான். நேற்று எபிசோடில் ஜோதிடர் சொன்ன வார்த்தையை நம்பி அப்போ இனி குணசேகரன் வர மாட்டார். அவர் இறந்தது போன்று காட்சிகள் வைத்து புதியதாக அவருடைய அண்ணன் வந்து அனைவரையும் பாடாய்படுத்துவார் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம்.
ஆனால் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் திரும்பி வருவான் ஆனால் வரப்போறவன் ரொம்ப ஆபத்தானவனா வருவான் என்று அப்பத்தா சொல்கிறார். இதனால் இனி குணசேகரன் வருவாரா? இல்லையா? என்று மீண்டும் யோசிக்க வைத்திருக்கிறது இந்த பிரமோ. ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில எபிசோடுகளில் தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications