எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு அப்பத்தா கொடுத்த ஒரு வார டைம்.. கதிருக்கு வந்த மிரட்டல்.. செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா மீண்டும் வீட்டிற்கு வந்து குணசேகரனுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை கொடுக்கிறார்.
அதே நேரத்தில் துள்ளி கொண்டு திமிரிய கதிருக்கு போலீஸ் மூலமாக அப்பத்தா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் குணசேகரன் ஹாலில் இருந்து ஈஸ்வரியை பிரித்து விட வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா வீட்டிற்குள் வந்து இங்கே என்ன நடக்கிறது என்று கேட்க, ரேணுகா ஈஸ்வரி அக்காவை விவாகரத்து செய்ய போகிறாராம் என்று சொல்ல, அதுவெல்லாம் இருக்கட்டும் அதற்கு முன்பு முக்கியமான சில விஷயங்கள் இருக்கு அதைப்பற்றி நான் பேச வேண்டும் என்று அப்பத்தா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு அங்கு வந்து இருக்கும் பெரிய மனுஷர்களை வீட்டை விட்டு போங்க, இங்கே நான் வேற ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியது இருக்கு. நீங்க இப்போ உட்கார்ந்து இருக்கிற இடமும் என்னுடைய இடம் தான். 40% ஷேரில் வரும் இடத்தில் தான் நீங்க உட்கார்ந்து இருக்கீங்க. இப்போ நீங்க போங்க பிறகு வந்து பேசலாம் என்று அனுப்பி வைத்துவிட்டு குணசேகரனை உனக்கு சொந்தமான மாடிக்கு வா நான் அங்கு வச்சு உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு மாடிக்கு அப்பத்தா கிளம்பி போகிறார்.
அதைத்தொடர்ந்து ஞானத்திற்கு போன் போட்ட குணசேகரன் அவரை அவசரமாக வர சொல்ல ஞானம் வீட்டிற்கு வந்ததும் என்ன என்று கேட்க அப்பத்தா மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல, யாரும் வேண்டாம் என்று தானே போனாங்க மறுபடியும் எதற்கு வீட்டிற்கு வந்து இருக்காங்க என்று ஞானம் கேள்வி கேட்க அந்தக் கிழவி இப்ப போலீஸோட வீட்டுக்குள்ள வந்து இருக்காங்க என்று குணசேகரன் சொல்ல, சரி வாங்க அப்பத்தா என்னதான் சொல்லுதுன்னு பாப்போம் என்று எல்லோரும் மேலே மாடிக்கு வருகின்றனர்.

அங்கே அப்பத்தாவை பார்த்ததும் ஞானம் நான் அண்ணன் ஆரம்பத்தில் சரியில்லாமல் சில விஷயங்கள் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பதான் தெரியுது அவர்தான் சரி என்று அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சொத்து சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் நீ இப்படி எல்லாம் பண்ணலாமா என்று கேள்வி கேட்க ,அதற்கு அப்பத்தா நான் கொடுத்த அஞ்சு லட்சம் முதலில் தானே இந்த சம்பாத்தியம் எல்லாம் வந்தது.
ஆரம்பத்தில் உங்க அண்ணன் கம்பெனிகளை தொடங்கும் போது எத்தனை நோட்டீஸ் வந்துச்சுன்னு தெரியுமா? அதையெல்லாம் படிச்சு உங்களுக்கு பாக்க தெரியுமா? அதற்கு நீங்கள் ஏதாவது செஞ்சீங்களா? நான் தான் ஆடிட்டரிடம் பேசி எல்லாத்துக்கும் ரிப்ளை அனுப்பி இருக்கேன். இல்லன்னா அன்னைக்கே எல்லாத்தையும் இழுத்து மூட வேண்டியது இருக்கும். நான் மட்டும் அந்த அஞ்சு லட்சம் பணம் கொடுத்து உதவவில்லை என்றால் உங்கள் அண்ணன் இன்றைக்கு ஒரு டீக்கடைக்கு முதலாளியா இருப்பான் என்று சொல்ல கதிர் அப்பத்தாவை கொலை செய்வதற்காக கழுத்தை நெறிக்கிறார்.
அப்போது அங்கு இருக்கும் போலீஸ்காரர் ஏய் கையை எடு, இல்லன்னா உள்ள போய் தூக்கி போட்டுருவேன். நீங்க இப்படி எல்லாம் பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் அவங்க போலீஸ் பாதுகாப்போடு வந்திருக்காங்க. அதற்குப் பிறகும் இப்படி எல்லாம் பண்றீங்க என்று போலீஸ் மிரட்ட, பிறகு கதிர் அமைதியாக இருக்கிறார். அதற்கு பிறகு அப்பத்தான் நான் சில கண்டிஷனை சொல்ல வேண்டும் என்னோடு சொத்துக்களை இன்னும் ஒரு வாரத்தில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யப் போகிறேன். ஆனால் அதுவரைக்கும் நீ இந்த மருமகள்களை அடித்து துன்புறுத்தி என்கிட்ட வந்து சொத்து கேட்க தூது அனுப்பக்கூடாது.
அதுபோல இனி இந்த வீட்டில்தான் என் கூட சக்தியும் ஜனனியும் இருப்பாங்க என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்று கதிர் சத்தம் போட, அப்படி என்றால் கீழே இருக்கும் என்னுடைய ஃபோஸனில் எல்லாத்தையும் நான் மூடி விடுவேன். நீங்க மாடியில் மட்டும் தான் புலங்க வேண்டும். நீங்க மாடிக்கு கயிறு மூலமாக வருவீங்களோ எப்படி வருவீங்களோ எனக்கு தெரியாது என்று மிரட்ட, குணசேகரன் பதில் எதுவும் சொல்லாமல் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications