எதிர்நீச்சல்: கௌதமால் கதிருக்கு வரும் பிரச்சனை.. சந்தோஷத்தில் ஈஸ்வரி.. கழட்டிவிட்ட அப்பத்தா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் அப்பத்தா சொன்ன கண்டிஷனை பார்த்து கோபத்தில் அவரை கொலை செய்யலாம் என்று பிளான் போடுகிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தவர்களை நான் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்க போகிறேன் என்று கௌதம் சபதம் போடுகிறார்.
இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி எபிசோடு என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்

அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் என் கூட இந்த வீட்டில் தான் இருப்பார்கள் என்று அப்பத்தா சொன்னதை கேட்டு கோபமான குணசேகரன் அவ்வளவுதானே நீ பேசி முடிச்சிட்டாளா? என்று அப்பத்தாவிடம் கேட்டுவிட்டு சரி வா கதிர் நாம போகலாம் என்று சொல்ல, ஞானம் பொறுங்க கொஞ்சம் பேசுவோம் என்று சொல்ல, வேண்டாம் ஞானம் அதுதான் அப்பத்தா சொல்லிடுச்சு இல்ல, நாம பேசுற காலம் முடிஞ்சு போச்சு இப்போ கேக்குற காலம்னு நாம கேட்டுக்கிட்டே இருப்போம் வா போலாம் என்று அங்கு இருந்து கோபமாக வெளியே போகிறார்.
அதைத் தொடர்ந்து ஞானம் அப்பத்தாவிடம் நீ பண்றது ரொம்ப தப்பு அப்பத்தா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதை தொடர்ந்து ஜீவானந்தம் தன்னுடைய மகளுக்கு தலை பின்னி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு கௌதம், பர்ஹானா மேலும் புது உதவியாளர் என மூவரும் வருகின்றனர். அவர்கள் ஜீவானந்தம் எப்படி இருந்த மனிதன் இப்ப இப்படி மாறிவிட்டார் என்று ஃபீல் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு ஜீவானந்தத்திடமும் வெண்பாவிடமும் பேசிவிட்டு கிளம்பும் நேரத்தில் ஜீவானந்தம் என்னுடைய கயலை கொன்னவனை நான் சும்மா விடமாட்டேன் நாம் படுகிற வலி வேதனையை அவனுக்கு காட்டாமல் நான் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கான வழிகளை நான் பார்க்கிறேன் என்று கௌதம் சொல்லிவிட்டு கீழே வருகிறார். கீழே வந்ததும் நம்மை இந்த அளவிற்கு கொண்டுவந்து பல பேருக்கு உதவியாய் இருக்கிற இந்த மனுஷனுக்கு நிலைமை இப்படி ஆகிவிட்டது.
இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களை நான் சும்மா விட மாட்டேன். இவர் இனி வெண்பாவோடு சந்தோஷமாக இருக்கணும். அதுக்கான வழிகளை நானே தனியா பார்த்துக்கிறேன். எனக்குனு யாருமே இல்ல. அதனால நான் இந்த விஷயத்தில் முழுமையாக இறங்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு பர்ஹானா நானும் உனக்கு துணையாக இருப்போம் கௌதம் என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து குணசேகரன் ஆடிட்டர் மற்றும் வக்கீல் இருவரையும் கதிரோடு சென்று சந்திக்க அப்போது அவர்கள் உங்க அப்பத்தா என்ன செய்யப் போறாங்கன்னு புரிஞ்சிக்கவே முடியல என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போ அப்பத்தாவை போட்டு தள்ளிடலாமா என்று கேட்க, ஆடிட்டரும் வக்கீலும் சில நிமிடம் யோசித்து பிறகு சரி என்று சொல்கின்றனர்.
அதே நேரத்தில் அவங்க இறந்த பிறகும் சொத்து உங்களுக்கு தான் வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று சொல்ல, அதை கேட்டு குணசேகரன் யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications