எதிர்நீச்சல்: ஷேர் விஷயத்தில் அப்பத்தாவின் முடிவு.. கோபத்தில் ஜீவானந்தம்.. அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 6ஆம் தேதி என்ன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் அப்பத்தாவின் ஷேர் பற்றி தர்ஷினி கேட்ட கேள்விக்கு அப்பத்தா யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் கோபத்தில் ஜீவானந்தமும் தன்னுடைய நடவடிக்கை இனி எந்த மாதிரி இருக்கப் போகிறது என்பது பற்றி பேசி இருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வழக்கம்போல எதிர்நீச்சல் சீரியலில் யாரும் யூகிக்க முடியாத வகையில் அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அப்பத்தா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் குணசேகரன் அப்பத்தாவை போட்டு தள்ளிவிடலாம் என்று சொல்லி வக்கீல் மட்டும் ஆடிட்டருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதுவரைக்கும் வீட்டில் பெண்களை அதட்டி உருட்டி வைத்திருந்த குணசேகரனுக்கு முதல்முறையாக ஜீவானந்தம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இப்போது அதை தொடர்ந்து அப்பத்தாவும் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஜனனி மற்றும் சத்தி மீண்டும் என்னோடு இந்த வீட்டில் தான் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு வாரத்திற்குள் என்னுடைய பெயரில் இருக்கும் 40% ஷேரில் நான் ஒரு முக்கியமான முடிவெடுக்க போகிறேன். ஆனால் நீ அந்த சொத்துக்கள் வேண்டும் என்று வீட்டில் இருக்கும் மருமகளுக்கு அடித்தோ அல்லது மிரட்டியோ என்னிடம் வந்து பேச சொல்ல கூடாது என்றும் குணசேகரனை அப்பத்தா மிரட்டி இருந்தார்.
அதே நேரத்தில் மனைவியை இழந்து இருக்கும் ஜீவானந்தம் தன்னுடைய மனைவியை கொலை செய்தவரை நான் கண்டுபிடித்து கொல்லாமல் விடமாட்டேன் என்று கடும் கோபத்தில் காத்திருக்கிறார். நேற்றைய எபிசோடில் கௌதம் மற்றும் பர்காஹாவிடம் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டில் இருக்கும் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, தர்ஷினி, தர்ஷன் என அனைவரும் இருக்க அந்த இடத்தில் அப்பத்தாவும் சேரில் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கே தர்ஷினி அப்பத்தாவிடம், "நீங்க உங்க அந்த 40% ஷேரை இவங்களுக்காக தானே வச்சிருக்கீங்க" என்று சொல்ல, நான் இவங்களுக்காக கொடுக்கப் போறேன்னு உனக்கு யாரு சொன்னா? என்று கேட்டு அப்பத்தா அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதைத்தொடர்ந்து அந்த கிழவியை நானே கொன்னுற போறேன் என்று கதிர் குணசேகரனிடம் சொல்ல, அதற்கு குணசேகரன் "என்ன கல்யாணம் முடிக்க போறேன்" என்ற மாதிரி சொல்லுத, கிழவிய முடிக்கணும்பா. அது சாதாரண வேலை கிடையாது" என்று கூறிக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த 40% சுற்றியே கதை போகப்போகிறதோ தெரியலையே..!? சீக்கிரமா இந்த 40% பிரச்சனை முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications